Home நாடு அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கைகள் மாற்றப்படும், மலேசிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை!- பிரதமர்

அரசாங்கத்தின் வரிவிதிப்புக் கொள்கைகள் மாற்றப்படும், மலேசிய தயாரிப்புகளுக்கு முன்னுரிமை!- பிரதமர்

753
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஏற்றுமதியை விட அதிகமான இறக்குமதி வரிவிதிப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அரசாங்கத்தின் கொள்கைகள் மாற்றப்படலாம் என பிரதமர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ளார்.

இதன் மூலமாக, உள்ளூர் உற்பத்திகளைப் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதோடு, இறக்குமதியை குறைக்கலாம் என அவர் தெளிவுப்படுத்தினார்.

அதிகமான இறக்குமதி பொருட்களை பயன்படுத்தும் போது, நாட்டின் பணம் பெரிய அளவில் வெளிநாடுகளுக்குச் செல்வதாக அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

நாட்டின் சொந்த சாதனையை குறைத்து மதிப்பிடும் மக்களின் மனப்பான்மையின் காரணமாக நாட்டின் பணப்பரிமாற்றத்தில் பெரும்பகுதி ஓடியதாக அவர் கூறினார்.

எனவே, மலேசியர்கள் ஜப்பானியர்களைப் போன்று, தமது சொந்த தயாரிப்புகளை வாங்க முற்பட வேண்டும் என தாம் நம்புவதாக பிரதமர் நம்பிக்கைத் தெரிவித்தார்.