Home 13வது பொதுத் தேர்தல் புக்கிட் காசிங்கில் பி.பட்டு மகள் கஸ்தூரி போட்டி?

புக்கிட் காசிங்கில் பி.பட்டு மகள் கஸ்தூரி போட்டி?

673
0
SHARE
Ad

Kasturi-Pattoo-Sliderகோலாலம்பூர், ஏப்.3- வரும் 13ஆவது பொதுத்தேர்தலில் சிலாங்கூரிலுள்ள புக்கிட் காசிங் சட்டமன்றத் தொகுதியில் மறைந்த முன்னாள் ஜசெக நாடாளுமன்ற உறுப்பினர் பி.பட்டுவின் மகள் கஸ்தூரி போட்டியிடவுள்ளார்.

கடந்த 2008ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில்  தேசிய முன்னணி வேட்பாளரான டத்தோ டாக்டர் லிம் துவாங் செங்கை விட 8,812 வாக்குகள் கூடுதலாகப் பெற்று புக்கிட் காசிங் சட்டமன்ற உறுப்பினர் எட்வர்ட் லீ போ லின் (ஜசெக)  வெற்றி பெற்றார்.

2011ஆம் ஆண்டு லீ காலமானதைத் தொடர்ந்து அத்தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

#TamilSchoolmychoice

தற்போது ஜசெகவிற்கு பாதுகாப்பான அத்தொகுதியின் தேர்தல் இயந்திரத்தை கவனித்து கொள்ளும் பொறுப்பு பட்டுவின் மகள் கஸ்தூரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

“வரும் பொதுத்தேர்தலில் லீக்குப் பதிலாக நான் இத்தொகுதியில் போட்டியிடுகிறேனா? என்று பலர் கேட்கின்றனர். தான்  லீக்கு பதிலாக சேவையாற்ற வந்துள்ளேன். மேலும் சீனர்கள் அதிகமுள்ள இப்பகுதியில் போட்டியிட்டால் இன விவகாரத்தையும் கருத்தில் கொள்ள வேண்டும்” என்று கஸ்தூரி கூறினார்.

ஜசெகவின் முன்னணி இந்தியர் தலைவர் பி.பட்டு

1970ஆம் 80ஆம் ஆண்டுகளில் ஜசெகவின் முன்னணி இந்தியத் தலைவர்களுள் ஒருவராக விளங்கியவர் பி.பட்டு. சீன மொழி உட்பட பன்மொழிகளில் திறன் வாய்ந்தவர். மேடைப் பேச்சிலும் வல்லவராக விளங்கியவர்.

ஜசெகவில் தீவிரமாக செயல்பட்டு வந்த அவரது மகள் கஸ்தூரி 13வது பொதுத் தேர்தல் மூலம் முதன் முறையாக அரசியல் அரங்கில் காலடி எடுத்து வைக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.