‘எட்டி‘ எனப்படும் இராட்சத பனி மனிதன் இருப்பதாக பல வருடங்களாக கூறப்பட்டு வந்த நிலையில், அதனை நிரூபிக்க எந்தவொரு ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இந்நிலையில், மர்மமான கால்தடங்களை இந்திய இராணுவத்தினர் கண்டுள்ளனர்.
இதுகுறித்து இந்திய இராணுவம் தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டுள்ளது. 32 அங்குல நீளமும் 15 அங்குல அகலமும் அளவினைக் கொண்ட மர்மமான கால் தடத்தை அவர்கள் கண்டதாக பதிவிட்டுள்ளனர்.
மேலும், எட்டி குறித்த புகைப்பட மற்றும் காணொளி ஆதாரங்களை வைத்திருப்பதாகவும், அதனை விரைவில் வெளியிடும் எனவும் இந்திய இராணுவம் தெரிவித்துள்ளது.