Home கலை உலகம் அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி ஊர் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைத்த இரசிகர்கள்!

அஜித்தின் பிறந்தநாளை ஒட்டி ஊர் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைத்த இரசிகர்கள்!

753
0
SHARE
Ad

சென்னை: நேற்று புதன்கிழமை (மே 1-ஆம் தேதி) நடிகர் அஜித்தின் 48-வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

இவரது பிறந்தநாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் திருக்கோஷ்டியூர் என்ற கிராமத்தில் உள்ள அஜித் இரசிகர்கள் கிராமம் முழுவதும் மரக்கன்றுகள் நட்டு வைத்துள்ளனர்.

ஹைதராபாத்தில் பிறந்த அஜித் நேற்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு உலகம் முழுவதும் உள்ள அஜித் இரசிகர்கள், இந்தியத் திரைப்பட பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.

#TamilSchoolmychoice

பொதுவாக தங்களுக்கு பிடித்த நடிகருக்கு பிறந்தநாள் என்றால் அன்னதானம், இரத்ததானம், கேக் நறுக்கியும் கொண்டாடும் இரசிகர்களுக்கு மத்தியில், அஜித்தின் இரசிகர்கள் மரக்கன்றுகளை நட்டு வைக்கும் புகைப்படங்கள் சமூகப் பக்கங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.