Home உலகம் ஜப்பானின் புதிய அரசராக நருஹிட்டோ பதவி ஏற்பு!

ஜப்பானின் புதிய அரசராக நருஹிட்டோ பதவி ஏற்பு!

659
0
SHARE
Ad

டோக்கியோ: ஜப்பான் நாட்டின் 126-வது புதிய அரசராக நருஹிட்டோ நேற்று புதன் கிழமை பதவி ஏற்றார். அண்மையில், முந்தைய ஜப்பான் அரசர் அகிஹிட்டோ அரியணை துறப்பதாக அறிவித்திருந்தார்.

ஜப்பானில் இருநூறு ஆண்டுகளில் அரியணை துறக்கும் முதல் அரசராக இவர் திகழ்கிறார். 85 வயதான அகிஹிட்டோ, வயது மூப்பின் காரணமாகவும் அவருக்கு உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டு வருவதாலும் பதவி விலகுவதாக அறிவித்திருந்தார்.

அவருக்கு பிறகு தற்போது முடியரசர் நருஹிட்டோ பதவியேற்றுள்ளார். ஜப்பான் மற்றும் உலகுக்கு அமைதி மற்றும் வளம் வேண்டும் என்றும் தம்மை அடையாளமாக ஏற்றுக் கொண்ட தம் மக்களுக்கு தமது நன்றிகளை அகிஹிட்டோ தெரிவித்துக் கொண்டார்.