Home நாடு 1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 19-ஆம் தேதி தொடங்கும்!

1எம்டிபி வழக்கு விசாரணை ஆகஸ்டு 19-ஆம் தேதி தொடங்கும்!

617
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்டுள்ள 1எம்டிபி நிறுவனம் தொடர்பான 25 ஊழல் மற்றும் நிதி மோசடி குற்றங்களுக்கான விசாரணையை உயர்நீதிமன்ற நீதிபதி கொலின் லாரன்ஸ் செகரா வருகிற ஆகஸ்டு 19-ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளார்.

2.28 பில்லியன் ரிங்கிட் பணத்தை உள்ளடக்கிய இந்த  வழக்கும், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கைப் போன்று முக்கியத்துவம் நிறைந்தது என அவர் குறிப்பிட்டார். ஆகையால், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வழக்கினை இடையிலேயே நிறுத்தி பின்பு 1எம்டிபி வழக்கு தொடங்கப்படுவது சரியாக அமையாது என அவர் தெரிவித்தார்.

வருகிற ஆகஸ்டு 19-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி வரை, பின்பு செப்டம்பர், அக்டோபர் மாதம் முழுவதுமாகவும், நவம்பர் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களுக்கும் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என அவர் தெளிவுப்படுத்தினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக அரசாங்க தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் மற்றும் 1எம்டிபி வழக்குகளை ஒரே நேரத்தில் விசாரிக்கபடுவது குறித்து கோரிக்கை விடுத்திருந்தார். அதற்கு, நஜிப் தரப்பிலிருந்து எந்தவொரு எதிர்ப்பும் எழாததால், நீதிபதி இந்த புதிய தேதிகளை அறிவித்தார்.