Home நாடு கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை!

கிம் ஜோங் நம் கொலை தொடர்பில் கைதான வியட்னாமிய பெண்மணி விடுதலை!

825
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வடகொரிய அதிபரின் ஒன்று விட்ட சகோதரரை கொலை செய்தது தொடர்பில் கைதான வியட்னாம் நாட்டினைச் சேர்ந்த பெண்மணியான டோவன் தி ஹுவோங் இன்று வெள்ளிக்கிழமை காலை 7.20 மணியளவில் காஜாங் சிறைச்சாலையிலிருந்து விடுவிக்கப்பட்டார் என அவரது வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக பெர்னாமா செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, கிம் ஜோங் உன்னின் ஒன்றுவிட்ட சகோதரரான கிம் ஜோங் நமை கொலை செய்த வழக்கில், தடுத்து வைக்கப்பட்ட இந்தோனிசிய பெண்மணி கடந்த மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து தி ஹுவோங் மீதான விசாரணை நிறுத்தி வைக்கப்பட்டது. கிம் ஜோங் நமின் கொலை வழக்கிலிருந்து தி ஹுவோங்கை விடுதலைச் செய்யுமாறு கடந்த மார்ச் மாதம் வியட்னாம் வெளியுறவு அமைச்சு கேட்டுக் கொண்டது.

#TamilSchoolmychoice

கடந்த 2017-ஆம் ஆண்டு கோலாலம்பூர் விமான நிலையத்தில் ஜோங் நம் முகத்தில் விஎக்ஸ் பொடியை தூவியதாக இந்தோனிசிய மற்றும் வியட்னாம் நாடினைச் சேர்ந்த இரண்டு இளம் பெண்கள் தடுத்து வைக்கப்பட்டனர்.