எனினும் ஆற்றின் ஆழமில்லாத பகுதியில் தரையிறங்கிய காரணத்தால் பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்தனர். அந்த விமானத்தில் 136 பயணிகளும், 7 பணியாளர்களும் இருந்தனர்.
இன்று சனிக்கிழமை வரை ஆற்றிலேயே இருந்து வரும் அந்த விமானத்திலிருந்து விமானப் பயணம் குறித்த தகவல்கள் குறித்த ஆவணப் பெட்டகத்தை மீட்புப் படையின் கண்டெடுத்துள்ளனர். விமானியின் உரையாடல்கள் அடங்கிய பெட்டகம் இன்னும் விமானத்தின் வால்பகுதியில் நீருக்கடியில் இருந்து வரும் நிலையில் அதனை மீட்கும் பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.