Home உலகம் 143 பயணிகளுடன் ஆற்றில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

143 பயணிகளுடன் ஆற்றில் தரையிறங்கிய அமெரிக்க விமானம்

927
0
SHARE
Ad

வாஷிங்டன் – கியூபாவின் குவாண்டனமோ பகுதியில் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் உள்ள ஜேக்சன்வில்லே என்ற விமான நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை தரையிறங்கிய போயிங் 737-800 இரக விமானம் ஒன்று வழி தவறி, வழுக்கிச் சென்று தவறுதலாக அருகிலிருந்த செயிண்ட் ஜோன்ஸ் ஆற்றில் தரையிறங்கியது.

எனினும் ஆற்றின் ஆழமில்லாத பகுதியில் தரையிறங்கிய காரணத்தால் பயணிகள் சிறு காயங்களுடன் தப்பித்தனர். அந்த விமானத்தில் 136 பயணிகளும், 7 பணியாளர்களும் இருந்தனர்.

இன்று சனிக்கிழமை வரை ஆற்றிலேயே இருந்து வரும் அந்த விமானத்திலிருந்து விமானப் பயணம் குறித்த தகவல்கள் குறித்த ஆவணப் பெட்டகத்தை மீட்புப் படையின் கண்டெடுத்துள்ளனர். விமானியின் உரையாடல்கள் அடங்கிய பெட்டகம் இன்னும் விமானத்தின் வால்பகுதியில் நீருக்கடியில் இருந்து வரும் நிலையில் அதனை மீட்கும் பணிகள் மும்முரப்படுத்தப்பட்டுள்ளன.