Home நாடு 27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது!

27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டது!

676
0
SHARE
Ad

கோலாலம்பூர்:  எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் செண்டெரியான் பெர்ஹாட் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டுக்கள் சம்பந்தப்பட்ட நஜிப் ரசாக் மீதான பதினைந்தாவது நாள் விசாரணை இன்று புதன்கிழமை தொடங்கியது.

முன்னாள் பிரதமரான நஜிப், 42 மில்லியன் ரிங்கிட் உள்ளடக்கிய நிதி மோசடி மற்றும் அதிகார விதிமீறல் காரணமாக மூன்று குற்றச்சாட்டுக்களை எதிர் நோக்கியுள்ளார்கோலாலம்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியான முகமட் நாஸ்லான் முகமட் கசாலியின் முன்னிலையில் நஜிப்பின் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.

கடந்த 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி, மேபேங்க் வங்கி கணக்கிலிருந்து 140 மில்லியன் ரிங்கிட் பணத்தை எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வங்கி கணக்கிற்கு மாற்றும்படியாக புத்ரா பெர்டானா கொன்ஸ்டிராக்‌ஷன் செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனம் அறிவுறுத்தியதாக கோலாலம்பூர் மேபேங்க் வங்கி துணை மேலாளர் ஹாலிஜா கூறினார்.

#TamilSchoolmychoice

புத்ரா பெர்டானா கட்டுமான நிறுவனத்திடமிருந்து அது குறித்த ஒரு கடிதத்தை அடிப்படையாகக் கொண்டு அது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

அந்நிறுவனத்தின் மேபேங்க் கணக்கிலிருந்து (கணக்கு எண்: 014011327183) எஸ்ஆர்சி இண்டர்நேஷனல் வங்கிக் கணக்கிற்கு (கணக்கு எண்: 2112022010650) அப்பணம் அனுப்பப்பட்டது என அவர் தெரிவித்தார்.

மேலும், அதே வருடம் ஜூலை 8-ஆம் தேதி பெர்மாய் பினாராயா செண்டெரியான் பெர்ஹாட் நிறுவனத்தின் கட்டளைபடி, அந்நிறுவன கணக்கிலிருந்து 27 மில்லியன் ரிங்கிட் பணம் நஜிப்பின் அம்பேங்க் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

பெர்மாய் பினாராயா வங்கிக் கணக்கிலிருந்து (கணக்கு எண்: 514012042754),880′ என்ற எண்ணில் முடிவுப்பெறும் நஜிப்பின் வங்கிக் கணக்கில் அப்பணம் செலுத்தப்பட்டதாக அவர் கூறினார்.