Home நாடு தொழிலாளர்களுக்கான அமைச்சர் இந்தியராக இருந்தும் பயனில்லை, பிரதமரே தீர்வு காண வேண்டும்!- பிரெஸ்மா

தொழிலாளர்களுக்கான அமைச்சர் இந்தியராக இருந்தும் பயனில்லை, பிரதமரே தீர்வு காண வேண்டும்!- பிரெஸ்மா

982
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அந்நியத் தொழிலாளர்களின் பற்றாக்குறையால் 25 விழுக்காடு உணவகங்கள் மூடப்பட்டுள்ளதாக பிரெஸ்மா தலைவர் ஹாஜி அயூப் கான் நேற்று ஞாயிற்றுக்கிழமை குறிப்பிட்டிருந்ததாக மலேசிய நண்பன் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

முந்தைய அரசாங்க ஆட்சியிலிருந்தே இந்தப் பிரச்சனை தொடர்ந்து வருவதாகவும் இதற்கான எந்தவொரு தீர்வினையும் முந்தைய அரசாங்கம் உறுதிபடுத்தாததையும் அயூப் கான் சுட்டிக் காட்டினார்.

நம்பிக்கைக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பாவது இந்தப் பிரச்சனைக்கு ஒரு தீர்வு ஏற்படும் என நம்பியிருந்த அவர்களுக்கு பெரும் ஏமாற்றமே ஏற்பட்டதாக அவர் சுட்டிக் காட்டினார். அமைச்சரவையில் ஒன்றுக்கு நான்கு இந்திய அமைச்சர்கள் இருந்தும் கூட இந்த விவகாரத்தில் எந்தவொரு தீர்வும் எடுக்கப்படாததை அவர் சுட்டிக் காட்டினார். மேலும், மனிதவள அமைச்சராக ஓர் இந்தியர், அமைச்சராக இருந்தும் , இதற்கு தீர்வில்லை என நினைக்கும் போது வேதனை அளிகிறது என அவர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

பல மனுக்கள் வழங்கப்பட்டு விட்டன, இருந்தும் நடப்பு அரசாங்கத்திடமிருந்து எந்தவொரு பதிலும் இல்லை என அயூப் கூறினார். மேலும் குறிப்பிட்ட அயூப், மத்திய அரசு இந்தியர்களின் பிரச்சனைகள் குறித்து செவி கொடுத்து கேட்பதில்லை எனக் கூறினார்.

முன்பிருந்த அமைச்சர்களை சுட்டிக் காட்டி கூறியபோது, இது போன்ற விவகாரங்களில் துன் சாமிவேலு போன்றோர்கள் அமைச்சரவையில் இந்தியர்களுக்காக குரல் கொடுத்ததைப் பார்த்திருப்பதாகவும், அதற்குப் பிறகு வந்த இரு அமைச்சர்களும் குரல் கொடுத்ததையும் பார்த்திருப்பதாகவும் அயூப் கூறினார். தற்போதைய அமைச்சர்களிடமிருந்து இரு போன்ற எதிர்ப்பு குரலை கேட்பது அரிதாக உள்ளது அவர் குறிப்பிட்டார்.

இனியும், இவர்களை நம்பி காலம் தாழ்த்தாது, இப்பிரச்சனையை பிரதமர் மகாதீரின் பார்வைக்கு கொண்டு செல்ல இருப்பதாக அயூப் தெரிவித்தார்.