Home நாடு முகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்!

முகமட் அடிப் மரணம்: தீவிரவாதம், படுகொலைகள் நடத்த நால்வர் திட்டம்!

1062
0
SHARE
Ad

கோலாலம்பூர்: புனித ரமலான் மாதத்தில் முஸ்லிம்கள் நோன்பினை மேற்கொண்டிருக்கும் வேளையில், மலேசியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களையும் படுகொலைகளையும் நடத்த திட்டமிட்டிருந்த நான்கு நபர்களை காவல் துறை கைது செய்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளது.

நால்வரில் இருவர் ரோஹிங்கியா இனத்தைச் சார்ந்தவர்கள் எனவும், மேலும் இருவர்களில் ஒருவர் மலேசியாவைச் சேர்ந்தவரென்றும், மற்றொருவர் இந்தோனிசியாவை சேர்ந்தவரென்றும் காவல் துறை தெரிவித்துள்ளது. கடந்த மே மாதம் 5-ஆம் தேதி மற்றும் 7-ஆம் தேதியில் கோலாலம்பூர், சுபாங் ஜெயா மற்றும் கோலா பெராங்கில் நடத்தப்பட்ட சோதனையில் இவர்கள் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விசாரணையின் முடிவில், அவர்கள் ஐஎஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று ஒப்புக் கொண்டதுடன், சீ பீல்ட் கோயில் கலவரத்தில் மரணமுற்ற தீயணைப்பு வீரர் முகமட் அடிப்பின் மரணத்திற்கு பழி வாங்கும் முயற்சியில் இந்த தாக்குதல்களை நடத்த திட்டமிட்டதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.