Home வணிகம்/தொழில் நுட்பம் பிரிட்டன்: பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் முதலிடம்!

பிரிட்டன்: பணக்காரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் முதலிடம்!

727
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரிட்டனின் சண்டே டைம்ஸ் இணையத்தளம் வெளியிட்ட  பிரிட்டனின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்துஜா சகோதரர்கள் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளனர்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மற்றும் 2017-ஆம் ஆண்டில் இவர்கள் முதல் நிலையில் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.

ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் இந்துஜா இருவரின் சொத்து மதிப்பு 22 பில்லியன் பவுண்டுகள் மதிப்பில் முதலிடத்தில் இருப்பதாக அந்நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கடந்த 1914-ஆம் ஆண்டு இந்துஜா குழுமம் மும்பையில் நிறுவப்பட்டது. தற்போது உலகளவில் வளர்ந்துள்ள இக்குழுமம் எண்ணெய், எரிபொருள், வங்கி, தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளில் இயங்கி வருகிறது.

இதனை நடத்தி வரும் நான்கு சகோதரர்களில், 83 வயதான ஸ்ரீசந்த் மற்றும் 79 வயதான கோபிசந்த் இருவரும் பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றவர்கள் ஆவர்.