அலோர் ஸ்டார்: டத்தோஶ்ரீ பட்டம் கொண்ட ஒருவர் சங்க நிதியிலிருந்து மில்லியன் கணக்கான பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படுவதை கெடா மாநில ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) விசாரித்து வருவதாகக் கூறியுள்ளது.
அக்குறிப்பிட்ட சங்கத்தில் முக்கிய பதவியை வகிக்கும் அந்நபர் மில்லியன் கணக்கான ரிங்கிட்டை தவறாகப் பயன்படுத்தியிருப்பது சந்தேகிக்கப்படுவதாக கெடா மாநில ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் ஷாஹாரொம் நிசாம் அப்துல் மானாப் கூறினார்.
“நாங்கள் இது குறித்து தகவல்களைப் பெற்றுள்ளோம். இன்னும் தொடக்கக்கட்ட விசாரணையில் உள்ளது. அச்சங்கத்தின் ஊழியர்களை தற்போது நாங்கள் விசாரணைக்காக அழைத்துள்ளோம்” என்று அவர் கூறினார்.
ஆயினும், முன்னாள் அரசியல்வாதியுமான அந்நபரை இன்னும் விசாரணைக்காக அழைக்காததை அவர் உறுதிப்படுத்தினார். தேவைப்பட்டால் அவர் விசாரணைக்கு அழைக்கபடுவார் என ஷாஹாரொம் கூறினார்.