Home Video ஒத்த செருப்பு: ஓர் அறைக்குள்ளே தனித்து நடித்த பார்த்திபன்!

ஒத்த செருப்பு: ஓர் அறைக்குள்ளே தனித்து நடித்த பார்த்திபன்!

1125
0
SHARE
Ad

சென்னை: ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் நடிகர் பார்த்திபன். தற்போது, கதாநாயகன் பாத்திரத்தைத் தொடர்ந்து குணச்சித்திர வேடங்கள் மற்றும் வில்லன் வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார். 

இந்நிலையில், பார்த்திபனின் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்திற்கு ஒத்த செருப்பு என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் தோற்றத்தை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டார்இப்படத்தை பார்த்திபனே இயக்கி வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தின் முன்னோட்டக் காணொளி தற்போது வெளியாகி உள்ளது. ஒரே அறையில் படம் முழுவதும், மாறி மாறி பேசி நடிப்பது போன்ற காட்சி இதில் இடம் பெற்றுள்ளது. கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் இப்படத்தின் முன்னோட்டக் காணோளியைக் காணலாம்:

#TamilSchoolmychoice

 

 

Comments