Home நாடு முன்னாள் நிருவாகத்தின் தவறுகளை விசாரிக்க ஆள் பலம் இல்லை!- பிரதமர்

முன்னாள் நிருவாகத்தின் தவறுகளை விசாரிக்க ஆள் பலம் இல்லை!- பிரதமர்

760
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கடந்த கால நிருவாகத்தின் தவறான நடவடிக்கைகள் பற்றிய ஒவ்வொரு குற்றச்சாட்டுக்களையும் விசாரணை செய்வதற்கு அரசாங்கதிற்கு போதுமான ஆள்பலம் இல்லை என பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி நஜிப்புக்கு எதிராக ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கப்பட்ட நிலையில், முன்னால் அரசாங்க தலைமை வழக்கறிஞர் அப்துல் கானி பதாய்ல் பதவி நீக்கம் செய்யப்பட்டாரா என்பதை விசாரிக்க வேண்டும் என ஜசெக ஆலோசகர் லிம் கிட் சியாங் குறிப்பிட்டதற்கு பிரதமர் இவ்வாறு கருத்துரைத்தார்.

“இந்நேரத்தில், முன்னாள் பிரதமரின் மோசமான வழக்குகளை நாம் விசாரித்து வருகிறோம். குறிப்பாக, ஓய்வூதிய நிதி அமைப்பின் நிதிகள் காணாமல் போனதை விசாரித்து வருகிறார்கள்” என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னதாக, முன்னாள் அரசாங்க தலைமை வழக்கறிஞர் முகமட் அபாண்டி அலி, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹ்மான் டாலான், முன்னாள் தேசிய செயலாளர் அலி ஹம்சா மற்றும் முன்னாள் பொதுச் சேவை இயக்குனர் முகமட் சாபிடி சைனால் ஆகியோரை விசாரிக்குமாறு லிம் கேட்டுக் கொண்டார்.