Home வணிகம்/தொழில் நுட்பம் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கிய வாரன் பஃபெட்

3.6 பில்லியன் அமெரிக்க டாலர் நன்கொடை வழங்கிய வாரன் பஃபெட்

872
0
SHARE
Ad

நியூயார்க் – அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாரன் பஃபெட் (Warren Buffett) தனது வியூக ரீதியான, புத்திசாலித்தனமான முதலீடுகளால் ஏராளமான நிறுவனப் பங்குகளைக் கொண்டிருக்கும் முதலீட்டாளர். அவரது முதலீட்டு நிறுவனமான பெர்க்‌ஷையர் ஹாத்வே இன்கொப்பரேடட் உலகின் பல முன்னணி நிறுவனங்களில் பங்குடமைகளைக் கொண்டிருக்கிறது.

வாரன் பஃபெட் தனது பெர்க்‌ஷையர் ஹாத்வே முதலீட்டு நிறுவனத்தின் 3.6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான பங்குகளை 5 அறவாரியங்களுக்குப் பிரித்துக் கொடுப்பதாக அறிவித்திருக்கிறார்.

மைக்ரோசாப்ட் உரிமையாளரும் உலகின் முதல்நிலை பணக்காரராகக் கருதப்படுபவருமான பில் கேட்சும் அவரது மனைவி மெலிண்டாவும் இணைந்து நடத்தி வரும் பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷன் (Bill & Melinda Gates Foundation) அமைப்பும் அந்த 5 அறவாரியங்களில் ஒன்றாகும்.

#TamilSchoolmychoice

தான் வாழ்நாளில் சம்பாதித்த முதலீட்டுப் பங்குகளை அறவாரியங்களுக்கும் நற்பணிகளுக்கும் நன்கொடையாக வழங்கப் போகிறேன் என 2006-ஆம் அறிவித்த வாரன் பஃபெட் இதுவரையில் 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான பங்குகளை அறவாரியங்களுக்கு நன்கொடையாக வாரி வழங்கியுள்ளார்.

கடந்த 50 ஆண்டுகளாகத் தனது உழைப்பு, வியூகம், அறிவாற்றல் ஆகியவற்றின் மூலம் பெர்க்‌ஷையர் ஹாத்வே முதலீட்டு நிறுவனத்தை 500 பில்லியன் டாலர் அமெரிக்க டாலர் மதிப்புடைய நிறுவனமாக வளர்ச்சியடையச் செய்தவர் வாரன் பஃபெட் ஆவார்.