ஆயினும், மேல்முறையீட்டின் முடிவு கட்சியின் ஒழுக்காற்று வாரியமே முடிவு செய்யும் என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மீண்டும் கட்சியில் சேர வேண்டுகோள் விடுத்த ஹசீக்கின் அறிக்கை குறித்து கருத்து கேட்கப்பட்ட போது அவர் இவ்வாறு கூறினார்.
பிகேஆர் கட்சியின் துணைத் தலைவர் அஸ்மின் அலியுடன் இணைக்கப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளியில் இருப்பது தாம்தான் எனக் கூறியதால் ஹசிக் நீக்கப்பட்டார்.
ஆயினும், அக்குற்றச்சாட்டை அஸ்மின் மறுத்தார். இது தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தம்மை வீழ்த்துவதற்கான மோசடி வேலை இது எனவும் அஸ்மின் தெரிவித்திருந்தார்.