ஜோகூர் மாநில சட்டசபை சபா நாயகர் டத்தோ அலி இஸ்கண்டார் மற்றும் மாநில செயலாளர் டத்தோ ஓபெத் தவில் ஆகியோர் இன்று காலை, ஜோகூர் சுல்தானை, மெர்சிங்கில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தனர்.
அதனைத் தொடர்ந்து, ஜோகூர் சட்டமன்றம் கலைக்கப்பட்டதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
ஜோகூர் சட்டமன்றத்தின் ஐந்தாண்டு தவணைக் காலம் வருகிற ஏப்ரல் 21 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
Comments