Home இந்தியா 16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்!

16 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அழைப்பாணை அனுப்பிய சபாநாயகர்!

765
0
SHARE
Ad

பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ்மஜத கூட்டணியில் இருந்த 16 அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி விலகி உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அம்மாநில சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இப்படி தொடர்ந்து பரபரப்பு நிலவிவரும் கர்நாடக அரசியல் களத்தின் அடுத்த அதிரடியாக, சட்டசபை சபாநாயகர் கேஆர் ரமேஷ் குமார், அதிருப்தி சட்டமன்ற உறுப்பினர்கள் நாளை செவ்வாய்க்கிழமை தன்னை வந்து சந்திக்குமாறு அழைப்பாணை (சம்மன்) அனுப்பியுள்ளார்.

#TamilSchoolmychoice

உச்சநீதிமன்ற உத்தரவின்படி 16 சட்டமன்ற உறுப்பினர்களின் பதவி விலகல் கடிதங்களை சபாநாயகர் ஏற்றுக் கொண்டால் சட்டசபை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 208 ஆக குறைந்துவிடும்அப்போது பெரும்பான்மையை நிரூபிக்க குமாரசாமிக்கு 105 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும்ஆனால், அவருக்கு 101 உறுப்பினர்களின் ஆதரவுதான் இருக்கும்.

இதனிடையே, என்டிடிவிக்கு சிறப்பு பேட்டியளித்த முதல்வர் குமாரசாமி, கர்நாடகாவில் காங்கிரஸ்மஜத கூட்டணி ஆட்சி கவிழாது என்று கூறியுள்ளார்.