Home நாடு ஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா?

ஓரினச் சேர்க்கை காணொளி: சட்டமன்ற உறுப்பினர் விசாரிக்கப்படுகிறாரா?

887
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் அஸ்மின் அலி தொடர்புடைய ஓரினச் சேர்க்கை காணொளி விசாரணை தொடர்பாக பிகேஆர் கட்சியின் சிலாங்கூர் மாநில சட்டமன்ற உறுப்பினரான நஜ்வான் ஹலிமி மீது காவல் துறை விசாரணை நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவரது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய கோத்தா அங்கெரிக் சட்டமன்ற உறுப்பினருமான நஜ்வான் புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார்.

புக்கிட் அமான் குற்றவியல் புலனாய்வுத் துறை இயக்குனர் ஹுசிர் முகமட் மலேசியாகினிக்கு இவ்விவகாரத்தை தெரிவித்ததாகவும், ஆயினும் அந்த நபர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் என்பதை அவர் உறுதிப்படுத்த மறுத்துவிட்டார் என்றும் குறிப்பிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இருப்பினும், அந்நபர் நஜ்வான் ஹலிமிதான் என மலேசியாகினி நம்புவதாகக் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஜூலை 20-ஆம் தேதி, இந்த காணொளி விவகாரத்தில் தாம்தான் சூத்திரதாரி எனும் கூற்றினை நஜ்வான் மறுத்தார்.

இம்மாதிரியான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றது என்று விவரித்த அவர், சமூக ஊடகங்களில் கட்சியின் ஒற்றுமையை குழைக்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளதாக நஜ்வான் கூறியிருந்தார்.