Home வணிகம்/தொழில் நுட்பம் 5 பில்லியன் அமெரிக்க டாலரை செலுத்த பேஸ்புக் ஒப்புதல்!

5 பில்லியன் அமெரிக்க டாலரை செலுத்த பேஸ்புக் ஒப்புதல்!

715
0
SHARE
Ad

கலிபோர்னியா: பேஸ்புக் நிறுவனம் அதன் தனியுரிமை நடைமுறைகள் குறித்த அரசாங்க விசாரணையைத் தீர்ப்பதற்கு 5 பில்லியன் அமெரிக்க டாலர் அபராதத்தை செலுத்துவதுடன்,  பயனர் தரவுகளில் பாதுகாப்பை அதிகரிக்கும் என்று அமெரிக்க பெடரல் டிரேட் கமிஷன் மற்றும் சமூக ஊடக நிறுவனம் நேற்று புதன்கிழமை தெரிவித்துள்ளது.

அண்மையில் பேஸ்புக் நிறுவனம் பயனர்களின் தகவல்களை அவர்களின் அனுமதியின்றி சேகரித்து வைத்துள்ளது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்து அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் வகையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து, பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பான விசாரணையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில், அந்நிறுவனம் மீது விதிக்கப்பட்டிருந்த 5 பில்லியன் டாலர்கள் அபராதத்துக்கு மத்திய விசாரணை குழு ஒப்புதல் வழங்கியது.

#TamilSchoolmychoice

சுமார் 87 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் தரவுகளைஅரசியல் ஆலோசனை வழங்கும் நிறுவனமான கேம்பிரிட்ஜ் அனாலிடிகா தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டை அந்நாட்டின் மத்திய வணிக ஆணையம் விசாரித்து வந்தது.

இது குறித்து பேஸ்புக் மற்றும் மத்திய வணிக ஆணையம் எவ்வித கருத்தும் தெரிவிக்காத நிலையில், தற்போது அபராதத்தை செலுத்துவதுடன் ஒரு சில பாதுகாப்பு அம்சங்களையும் ஆராயும் என்று குறிப்பிட்டுள்ளது.