Home One Line P1 54-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர்!

54-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் சிங்கப்பூர்!

874
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிங்கப்பூர் இன்று தனது 54-வது தேசிய தினத்தை கொண்டாடுகிறது. இந்த ஆண்டு கொண்டாட்டம் ஒரு சிறப்பு வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இது நாட்டின் இருநூறு ஆண்டு இலக்குக் கட்டத்தைக் குறிக்கிறது, அதாவது சர் ஸ்டாம்போர்ட் ராஃபிள்ஸ் சிங்கப்பூருக்கு வந்து 200 ஆண்டுகள் ஆகின்றன.

சிங்கப்பூர் பிரதமதின் அலுவலகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் சிங்கப்பூர் இருநூறாண்டு அலுவலகத்தின்படி, இருநூறாண்டுக்கு முன்னர் சிங்கப்பூருக்கு ஆங்கிலேயர்கள் வந்ததன் நிறைவை இது குறிக்கிறது. அதுதான் சிங்கப்பூர் வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.

#TamilSchoolmychoice

ஆனால் எங்களின் வரலாறு 1819-இல் தொடங்கவில்லை. அதற்கு முன்னர், 700 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியதுஎன்று அது குறிப்பிட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து இன்று பாடாங்கிஒல் நடைப்பெற இருக்கும் தேசிய தினக் கொண்டாட்டத்திற்கு மலேசிய பிரதமர் துன் டாக்டர் மகாதீர்  முகமட் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த ஏப்ரல் மாதம் புத்ராஜெயாவில் 9-வது மலேசியாசிங்கப்பூர் தலைவர்கள் சந்திப்பின் போது, சிங்கப்பூர் ​​பிரதமர் லீ தனது மலேசிய பிரதிநிதி துன் டாக்டர் மகாதீர் முகமட்டை இந்த ஆண்டின் தேசிய தின அணிவகுப்பில் கலந்து கொள்ள அழைத்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதற்கு மரியாதை செலுத்தும் வகையில், டாக்டர் மகாதீர் அழைப்பை ஏற்றுக் கொண்டு, இன்று பிற்பகல் பாடாங்கில் நடைபெறும் அணிவகுப்புக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுதந்திரத்திற்குப் பிந்தைய முதல் தேசிய தின அணிவகுப்பு பாடாங்கில் கடந்த 1966-இல் நடைபெற்றது. கடந்த 1959-இல் சுயராஜ்யத்தின் அறிவிப்புகளுக்கும், 1963-இல் மலேசியாவுடனான இணைப்பிற்கும் இவ்விடம் சாட்சியாக இருந்துள்ளது.