Home நாடு ஜாகிர் நாயக் 7 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

ஜாகிர் நாயக் 7 மணி நேரம் காவல் துறையினரால் விசாரிக்கப்பட்டார்

682
0
SHARE
Ad
காவல் துறையிலிருந்து வெளியேறும் ஜாகிர் நாயக் (படம்; நன்றி ஸ்டார் இணையத் தளம்)

கோலாலம்பூர் – சர்ச்சைக்குரிய மத பரப்புரையாளர் ஜாகிர் நாயக் நேற்று வெள்ளிக்கிழமை புக்கிட் அமான் காவல் துறை தலைமையகத்தினரால் சுமார் 7 மணி நேரம் விசாரிக்கப்பட்டார்.

வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பின்னர் புக்கிட் அமான் வந்து தனது இனரீதியான உரை தொடர்பில் வாக்குமூலம் வழங்கத் தொடங்கிய அவர் சுமார் 7 மணி நேரத்திற்குப் பின்னர் இரவு 8.15 மணியளவில் வெளியேறினார்.

காவல் துறை தலைமையகத்திலிருந்து வெளியேறியபோது அவர் பத்திரிக்கையாளர்களிடம் எதுவும் பேசவில்லை.

#TamilSchoolmychoice

அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் நோக்கில்  அவமதிப்பு உரையாற்றியதற்காக குற்றவியல் பிரிவு 504-இன் கீழ் அவர் விசாரிக்கப்படுகிறார்.

கிளந்தானில் அவர் ஆற்றிய உரை தொடர்பில் 115 புகார்கள் இதுவரையில் காவல் துறையில் செய்யப்பட்டுள்ளன.

அவருக்கு 2015-ஆம் ஆண்டில் மலேசியாவில் நிரந்தரமாகத் தங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.