கோலாலம்பூர்: மலேசிய இந்துக்கள் மற்றும் சீனர்களை ஜாகிர் நாயக் அவமதித்ததாகக் கூறப்படும் விசாரனை வருகிற திங்கட்கிழமை தொடரும் என்று குற்றவியல் புலனாய்வு பிரிவு இயக்குனர் ஹுசிர் முகமட் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், ஜாகிரை காவல் துறை விசாரித்ததாகவும், அதற்கு பிறகு ஜாகிர் நோன்பு இருப்பதன் காரணமாக அது நிறுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியர்கள் இந்தியர்கள், பிரதமர் டாக்டர் மகாதீரை விட, இந்திய அரசாங்கத்தை ஆதரிக்கிறார்கள் என்று ஜாகிர் கூறியதற்கு பரவலாக விமர்சிக்கப்பட்டார். சீன மலேசியர்களை விருந்தினர்கள் என்றழைத்தார், அவர் இந்நாட்டை விட்டு செல்ல வேண்டுமெனில், முதலில் வந்த சீனர்கள்தான் வெளியேற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இவ்விரண்டு கருத்துகள் தவறாக மேற்கோள் காட்டப்பட்டதாக ஜாகிர் கூறியுள்ளார்.