Home One Line P1 சந்திராயன் 2 நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது!

சந்திராயன் 2 நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியது!

996
0
SHARE
Ad

புது டில்லி: புவி வட்டப்பாதையில் இருந்து விலகிய சந்திராயன் 2 செயற்கைக்கோள் நிலவின் வட்டப்பாதையை சுற்றத் தொடங்கியுள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது

நிலவை பற்றி ஆய்வு செய்வதற்காக சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து 3,850 கிலோ எடை கொண்ட சந்திரயான்– 2 விண்கலம் ஜிஎஸ்எல்வி மார்க்– 3 ஏவுகலம் மூலம் கடந்த மாதம் 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

ஜூலை 23-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரையிலும் சந்திரயானின் சுற்றுப்பாதை படிப்படியாக ஐந்து முறை அதிகரிக்கப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது

#TamilSchoolmychoice

இவ்வாறு சந்திரயான் 2 நீள்வட்ட பாதையில் தனது வேகத்தை அதிகரித்து பூமியைவிட்டு கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து தூரமாக சென்ற நிலையில், கடந்த ஆகஸ்ட் 14-ஆம் நாள் அதிகாலை 2.21 மணிக்கு ஆறாவது முறையாக சுற்றுவட்டப் பாதை மாற்றப்பட்டு நிலவை நோக்கி வெற்றிகரமாக திசை மாற்றப்பட்டது

நிலவை நோக்கி பயணிக்கத் தொடங்கிய சந்திராயன்-2 விண்கலத்தை இன்று செவ்வாய்க்கிழமை நிலவின் சுற்றுவட்டப்பாதையில் சேர்க்க முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, இதுகுறித்து இஸ்ரோ தலைவர் சிவன் கூறுகையில், இன்று காலை 8.30 மணி முதல் 9.30 மணி வரை திரவ என்ஜின் இயக்கப்பட உள்ளது. இது மிக முக்கிய தருணமாகும் என்றார்.