Home One Line P1 தஞ்சோங் பியாய்: 18 வயது இளைஞர்களை போட்டியிட அனுமதிக்கும் வரலாற்று மிக்கத் தொகுதி!!

தஞ்சோங் பியாய்: 18 வயது இளைஞர்களை போட்டியிட அனுமதிக்கும் வரலாற்று மிக்கத் தொகுதி!!

666
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அடுத்த மாதம் ஜோகூரில் நடைபெற இருக்கும் தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் தொடங்கி 18 வயது இளைஞர்களை தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கும் முடிவு நாட்டின் ஜனநாயக அமைப்பு மற்றும் அரசியல் நிலைப்பாட்டுக்கும் ஒரு திருப்புமுனையாக அமைய உள்ளது.

18 வயது வேட்பாளர்களை போட்டியிட அனுமதிக்கும் இடைத்தேர்தல் இளைஞர்களின் பிரதிநிதித்துவத்தில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தும் ஒரு தொடக்க புள்ளியாகும் என்று பலர் கருதுகின்றனர்.

தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலும் 18 வயது வேட்பாளரை நியமனம் செய்வது, இளைஞர்களின் குரலை மேம்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பிரதிநிதித்துவப்படுத்துவதற்கும் ஒரு வாய்ப்பாகும். மேலும், நாட்டின் தேர்தல்களில் ஒரு வரலாற்றையும் அது உருவாக்கும்.

#TamilSchoolmychoice

கடந்த செவ்வாயன்று, தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹாருன், வருகிற நவம்பர் 16-ஆம் தேதி தஞ்சாங் பியாய் இடைத்தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல் கட்சியும் 18 வயது வேட்பாளரை பரிந்துரைக்க முடியும் என்று கூறியிருந்தார்.

கடந்த செப்டம்பர் 10-ஆம் தேதி அன்று வர்த்தமானி செய்யப்பட்ட மத்திய அரசியலமைப்பின் 47-வது பிரிவின் திருத்தத்திற்கு ஏற்ப இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், 18 வயதிற்குட்பட்ட வாக்களிக்கும் வயது இன்னும் இறுதி செய்யப்படாததால், இது ஒரு விரைவான நடவடிக்கை என்று சிலரிடமிருந்து வேறுபட்ட எதிர்வினைகளும் பெற முடிகிறது.

மாரடைப்பைத் தொடர்ந்து செப்டம்பர் 21-ஆம் தேதி டாக்டர் முகமட் பாரிட் முகமட் ராபிக் (42) இறந்ததைத் தொடர்ந்து தஞ்சாங் பியாய்யில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

14-வது பொதுத் தேர்தலில், பாரிட் 524 வாக்குகள் பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத் தொகுதியை வென்றார்.