Home One Line P1 தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 24 முதல் டச் எண்ட் கோ பற்று அட்டைகளில் தொகை அதிகரிப்பு...

தீபாவளியை முன்னிட்டு அக்டோபர் 24 முதல் டச் எண்ட் கோ பற்று அட்டைகளில் தொகை அதிகரிப்பு செய்ய இயலாது!

706
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை முதல் வடக்கு தெற்கு நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து இயக்கத்தை சீராக இயக்குவதற்கு அனைத்து டச் எண்ட் கோ பற்று அட்டை தொகை அதிகரிப்பு முகப்புகளும் மூடப்படும் என்று பிளாஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நெடுஞ்சாலைகளில் பயனர்கள் வரிசையாக வெகு நேரம் நிற்பதால் இம்மாதிரியான பண்டிகை காலத்தில் தொகை அதிகரிப்பு முகப்புகளை மூடுவது வழக்கமான செயல் என்று அது நேற்று புதன்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இதனால் ஏற்படும் நெரிசலைக் குறைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

இந்த பண்டிகை காலங்களில், வெள்ளிக்கிழமை முதல் சனிக்கிழமை (அக்டோபர் 25-26) மற்றும் திங்கட்கிழமைகளில் (அக்டோபர் 28), வார நாட்களில் 1.7 மில்லியன் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, ​​போக்குவரத்து 17 விழுக்காடு அதிகரித்து இரண்டு மில்லியனாக இருக்கும்.” என்று அது கூறியது.

#TamilSchoolmychoice

எனவே, நெடுஞ்சாலை பயனர்கள் தங்கள் பயணத்தைத் திட்டமிடவும், முதலில் அவர்களின் டச் எண்ட் கோ பற்று அட்டைக்கு உள்ளிட்டுத் தொகையை அதிகரித்துக் கொள்ளவும், அதற்கு போதுமான பாக்கி பணம் இருப்பதையும் உறுதிசெய்ய வேண்டும் என்று பிளாஸ் அறிவுறுத்தியுள்ளது.