இரு மாநிலங்களுடன் சேர்ந்து, 17 மாநிலங்களில் 51 இடங்களில் சட்டசபை இடைத்தேர்தலுக்கான முடிவுகளும் அறிவிக்கப்படும்.
மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பாஜகவும் அதன் நட்பு கூட்டணியுமான சிவசேனாவும் 288 சட்டமன்ற இடங்களில் 167 இடங்களில் முன்னிலையில் உள்ளன. காங்கிரசும் அதன் நட்பு கூட்டணியான தேசியவாத காங்கிரஸ் கட்சியும் (என்சிபி) 89 இடங்களில் முன்னணியில் உள்ளன.
அதே நேரத்தில் ஆளும் கட்சியும் ஹரியானாவில் தீர்க்கமாக முன்னிலையில் உள்ளது. 90 இடங்களில் 41 இடங்களில் பாஜகவும், 30 இடங்களில் காங்கிரஸும் முன்னணியில் உள்ளன.
(மேலும் விவரங்கள் தொடரும்)