Home One Line P1 நக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்!

நக்ரி, மேட்மோ சூறாவளியின் தாக்கம் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கலாம்!

693
0
SHARE
Ad

ஜோர்ஜ் டவுன்: நக்ரி மற்றும் மேட்மோ சூறாவளியைத் தொடர்ந்து இன்று வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பினாங்கில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் பினாங்கு மாநிலம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக மக்கள் நலன், சுற்றுச்சூழல் குழுவின் தலைவர் பீ பூன் போ தெரிவித்தார்.

வானிலை சம்பந்தப்பட்ட துறைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும், எந்தவொரு சூழ்நிலையையும் சந்திக்க எப்போதும் தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.

நாங்கள் (பினாங்கு) நக்ரி சூறாவளிக்கு நடுவில் இருக்கிறோம். இது சனிக்கிழமை வியட்நாமை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதே நேரத்தில் மேட்மோ சூறாவளி மியான்மார் மற்றும் வங்காளதேசத்தை நாளை சனிக்கிழமை பாதிக்கும்.”

#TamilSchoolmychoice

இவ்விரண்டு சூறாவளிகளும் பினாங்கில் பாதிப்புகளை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை தொடர்ச்சியான இடியுடன் கூடிய மழை பெய்யும்என்று அவர் நேற்று வியாழக்கிழமை தெரிவித்தார்.

உபகரணங்கள், வாகனங்கள், தளவாடங்கள் மற்றும் மனிதவளம் உட்பட தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுமாறு அனைத்து தரப்பினருக்கும், குறிப்பாக சிறப்புப் படைகள் மற்றும் மக்கள் நலன் குழுக்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.