Home One Line P1 மலேசிய பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது!

மலேசிய பொருளாதாரம் மூன்றாம் காலாண்டில் 4.4 விழுக்காடு வளர்ச்சியை அடைந்துள்ளது!

909
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசிய பொருளாதாரம் 2019-ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டில் 4.4 விடுக்காடு வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாக மலேசிய தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், அந்த எண்ணிக்கை 2018-ஆம் ஆண்டுக்கான மூன்றாம் காலாண்டில் பதிவானதைப் போலவே இருப்பதாக அது குறிப்பிட்டுள்ளது.

முதன்மை துறை வளர்ச்சி மற்றும் குறைந்த சுரங்க மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் காரணமாக இந்த செயல்திறன் ஏற்பட்டதாக தேசிய இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

மேலும், உள்நாட்டு தேவை மற்றும் நிகர ஏற்றுமதியும் மூன்றாம் காலாண்டில் மெதுவான வளர்ச்சி வேகத்தை பதிவு செய்துள்ளன.

இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் மலேசிய பொருளாதாரம் 4.6 விழுக்காடு வளர்ச்சியடைந்துள்ளதாகவும், அந்த எண்ணிக்கை 2020 வரை இருக்கும் என்றும் தேசிய வங்கி தெரிவித்துள்ளது.

இந்த வளர்ச்சி முக்கியமாக தனியார் துறை நடவடிக்கைகளால் உந்தப்பட்டது என்ரும், குறிப்பாக வீட்டுச் செலவு,  வேலைவாய்ப்பு மற்றும் வருமானத்தின் அடிப்படையில் தொடர்ச்சியான வளர்ச்சியால் ஆதரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

கூடுதலாக, பொருள் மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) முடிவடைந்ததைத் தொடர்ந்து காலாண்டில் ஒட்டுமொத்த பணவீக்க விகிதம் 1.5 விழுக்காடாக இருந்தது.

2020-ஆம் ஆண்டிற்கான சராசரி பணவீக்கம் இந்த ஆண்டை விட அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஆனால் அது சாதாரணமாகவே இருக்கும் என்று தேசிய வங்கி குறிப்பிட்டுள்ளது.