Home One Line P1 வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்

வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை, உடன்படுகிறோம்!- தேர்தல் ஆணையம்

681
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வீட்டுக்கு வீடு பிரச்சாரங்களுக்கான காவல் துறை அனுமதி குறித்த உத்தரவு கடந்த நவம்பர் 2-ஆம் தேதி தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பின்னர் சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டது என்றும் அது பிரச்சாரக் காலத்தில் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்படவில்லை என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தலைவர் டத்தோ அசார் அசிசான் ஹாருன் கூறுகையில், வேட்பாளர்களின் பிரதிநிதிகள் அது குறித்து கூறும்போது எந்த ஆட்சேபனையும் எழுப்பவில்லை என்றார்.

அவர்கள் ஆட்சேபிக்கவில்லை, உண்மையில், பலர் அனுமதிப்பத்திரத்திற்கு விண்ணப்பிக்க வந்தனர், இது காவல்துறையினரால் வழங்கப்பட்டது.”

#TamilSchoolmychoice

எனவே, இது பிரச்சாரத்தின் நடுவில் அறிமுகப்படுத்தப்படவில்லை. இது ஒரு பொய்யான தகவல். அந்த பொய்யைக் கூறியவர்கள் மோசமான எண்ணத்தோடு செய்தார்கள் என்றும், அந்த நிபந்தனையை தேர்தல் ஆணையம்தாம் வெளியிட்டது என்று சொன்னவர்களும் மோசமான எண்ணத்துடன் காரியத்தை செய்துள்ளார்கள் என்றும் நான் நினைக்கிறேன்.” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறினார்.

வீடு வீடாக சென்று பிரச்சாரங்கள் செய்வதற்கு அனுமதி தேவை என்பது ஒரு பிரச்சனையாகிவிட்டது. ஆயினும், இந்த செயல்முறை காவல் துறையினர் சட்டம் ஒழுங்கை பராமரிக்க உதவுவதாகவும், இதில் சண்டைகள் மற்றும் போட்டியிடும் கட்சிகளின் ஆதரவாளர்கள் சம்பந்தப்பட்ட பிற விரும்பத்தகாத சம்பவங்கள் செய்வதிலிருந்து தடுக்கவும் ஏதுவாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

எவ்வாறாயினும், வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் காவல் துறையின் அனுமதியைப் பெறத் தேவையில்லை என்று நேற்று வியாழக்கிழமை அரசாங்க தலைமை வழக்கறிஞர் டான்ஸ்ரீ டோமி தாமஸ்  கூறியிருந்தார்.

தேர்தல் குற்றச் சட்டம் 1954-இன் பிரிவு 24(பி) கீழ் இதற்கு தெளிவான விளக்கமுறை இல்லை என்று அவர் கூறியிருந்தார்.

அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் ஒரு வழிகாட்டுதலையும் சட்டத்தின் விளக்கத்தையும் கொண்டு வந்துள்ளார், தனிப்பட்ட முறையில், ஆம், அவருடைய ஆலோசனையுடன் நாங்கள் உடன்படுகிறோம். சட்டத்தின்படி அவரது விளக்கம் சரியானது. வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி தேவையில்லை” என்று அசார் கூறினார்.