Home One Line P1 வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை!- டோமி தோமஸ்

வீட்டுக்கு வீடு பிரச்சாரத்திற்கு காவல் துறை அனுமதி தேவையில்லை!- டோமி தோமஸ்

737
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வீட்டுக்கு வீடு பிரச்சாரங்கள் காவல் துறையின் அனுமதி இருக்க வேண்டிய அவசியமில்லை என்று அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ் இன்று வியாழக்கிழமை உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பில் தேர்தல் நோக்கங்களுக்காக வீட்டுக்கு வீடு அடிப்படையிலான பிரச்சாரங்கள் உள்ளிட்ட பிரச்சார நடவடிக்கைகள் முக்கியமானவை என்று அவர் கூறினார்.

காவல் துறையினரின் அனுமதி தேவை குறித்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு தேர்தல் குற்றச் சட்டத்தின் பிரிவு 24பி (3)-இன் படி உள்ளது. இந்த விவகாரத்தில், இந்த விதிமுறை பிரச்சாரம் அல்லது வீட்டுக்கு வீடு பிரச்சாரம் ஆகியவற்றை வெளிப்படையாகக் குறிக்கவில்லை.”

#TamilSchoolmychoice

“1955-ஆம் ஆண்டு முதல், வாக்காளர்களைப் பெறுவதற்கான வழிமுறைகள் அனைத்து அரசியல் கட்சிகளிலிருந்தும் வேட்பாளர்களால் பயன்படுத்தப்படுகின்றன.  இவற்றிற்கு அனுமதி தேவையில்லாததை வரலாறு நிரூபித்துள்ளதுஎன்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

வாக்களிப்பது என்பது மத்திய அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள ஓர் அடிப்படை உரிமை என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் தோமஸ் கூறினார்.

தேர்தல் ஆணையத் தலைவர் அசார் அசிசான் ஹாருன் கடந்த செவ்வாயன்று, தஞ்சோங் பியாய் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களும் வீடு வீடாகச் செல்வது உட்பட பிரச்சாரங்களை நகர்த்துவதற்காக காவல் துறையினரின் அனுமதி பெற வேண்டும் என்று கூறியது குழப்பத்தை ஏற்படுத்தியது.