Home 13வது பொதுத் தேர்தல் தேசிய முன்னணி கொள்கை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் : ஒரு பார்வை

தேசிய முன்னணி கொள்கை அறிக்கையின் முக்கிய அம்சங்கள் : ஒரு பார்வை

870
0
SHARE
Ad

Najib-2---Sliderகோலாலம்பூர், ஏப்ரல் 7 – நேற்று இரவு தலைநகர் புக்கிட் ஜாலில் அரங்கில், கோலாகலமான முறையில் பிரதமர் நஜிப் துன் ரசாக்கால் தேசிய முன்னணியின் பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிடப்பட்டது.

தேசிய முன்னணியின் உறுப்பியக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட்டும் தனது துணைவியாரோடு கலந்து கொண்டார்.

புக்கிட் ஜாலில் அரங்கம் முழுக்க குழுமியிருந்த தேசிய முன்னணி ஆதரவாளர்களிடையே பிரதமர் நீண்ட உரையாற்றினார். பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் தேசிய முன்னணி அரசாங்கத்தின் சாதனைகளையும் பட்டியலிட்டார்.

#TamilSchoolmychoice

அவரது உரை தொலைக்காட்சி அலைவரிசைகளிலும், வானொலியிலும் நேரடியாக ஒளி, ஒலிபரப்பப்பட்டது.

“நம்பிக்கைக்கான உத்தரவாதம்” என்ற கருப்பொருளோடு வெளியிடப்பட்ட தேசிய முன்னணியின் கொள்கை அறிக்கையில் காணப்படும் சிறப்பம்சங்கள் பின்வருமாறு:

1.        வாழ்க்கைச் செலவினங்களை குறைக்க உதவிகள்

*     பிஆர்1எம் என்ற பெயரில் வழங்கப்படும் உதவித் தொகை குடும்பங்களுக்கு 1,200 ரிங்கிட்டாக

உயர்த்தப்படும்.   தனிநபர்களுக்கு 600 ரிங்கிட்டாக உயர்த்தப்படும். இவை   ஆண்டு தோறும்   வழங்கப்படும்.

*     புத்தகங்களுக்கான உதவித் தொகை பற்றுச் சீட்டு 300  ரிங்கிட்டாக உயர்த்தப்படும். பள்ளிப்

பிள்ளைகளுக்கான   உதவித் தொகை 150    ரிங்கிட்டாக உயர்த்தப்படும்.

*     கார்களின் விலைகள் குறைக்கப்படும்

*     “கெடாய் ராயாட்” எனப்படும் மக்களுக்கான மலிவு விலைக்  கடைகள் அதிகமாக கட்டப்படும்.

*     ஒரே மலேசியா சிறிய மருத்துவமனைகள் மக்கள் அதிகம்  வசிக்கும் பகுதிகளில் கட்டப்படும்.

*     வேலை செய்யும் பெற்றோர்களுக்கு பகல் நேரங்களில்  குழந்தைகளுக்கான பாதுகாப்பகம் மேலும் அதிகமாக   திறக்கப்படும்.

*     அகண்ட அலைவரிசைக்கான கட்டணம் 20 சதவீதம்  குறைக்கப்படும்.

2.    நகர்ப்புற நலன்களை உயர்த்துதல்

*     நகர்ப்புறங்களை நோக்கி மக்கள் நகர்வதால் ஏற்படும் பூகோள  ரீதியான மாற்றங்கள், பொருளாதார, சமூக

சவால்களை   எதிர்கொள்ள அரசாங்க அமைப்பை மாற்றியமைப்பதோடு,   புதிய அமைச்சு ஒன்றையும் உருவாக்குதல்.

*     உள்ளூர் நிர்வாகங்களில் அரசாங்க சார்பற்ற   அமைப்புக்களுக்கும் பொதுமக்களுக்கும் கூடுதல் பிரதிநிதித்துவம்

*    நகர்ப்புற மலிவுவிலை வீடுகளையும், அடுக்குமாடி  வீடுகளையும்   சீரமைத்து தரம் உயர்த்துதல் மற்றும் பொதுமக்களுக்கான வீட்டுடமைத் திட்டத்தை மேம்படுத்துதல்.

*     நகர்ப்புறங்களில் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த, பொழுது  போக்கு மையங்கள் உருவாக்குதல்; கல்வி, பயிற்சி, சுகாதார  மையங்களை உருவாக்குதல்.

*     பொதுப் போக்குவரத்துக்களை மேம்படுத்துதல்

3.    தரமான சுகாதார சேவைகள்

*     ஒவ்வொரு மலேசியனுக்கும் தரமான சுகாதார சேவை  கிடைக்கும் வண்ணம் தேசிய நிலையிலான திட்டத்தை   உருவாக்குதல்

*     ஒவ்வொரு மருத்துவமனையிலும், இதய நோய்களுக்காகவும்,   புற்று நோய் சிகிச்சைக்காகவும் தனி மையம் ஏற்படுத்துதல்.

*     அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் சிறுநீரக சுத்திகரிப்பு மையங்களை பொதுமக்களுக்காக உருவாக்குதல்.

*    சிறப்பு தேவைகள் கொண்ட மலேசியர்களுக்காக மருந்துகள்  மற்றும் மருத்துவ சேவைகளில் விலைக் குறைப்பு வழங்கும் அடையாள அட்டைகள் அறிமுகம்

*     முதியோர்களுக்கும், மரணத் தறுவாயில் இருப்பவர்களுக்கும் உதவ ஆதரவு இல்லங்கள்  அமைத்தல்

4.    பொதுப் போக்குவரத்தை தரம் உயர்த்தி, மேலும் சிறப்பாக  செயல்படுத்துதல்

*     “ரேப்பிட்” (Rapid) எனப்படும் துரித பேருந்து சேவைகளை  ஒவ்வொரு மாநில தலைநகரிலும் விரிவுபடுத்துதல் – அந்த  சேவைகளில் முதியோர்களுக்கும் ஊனமுற்றவர்களுக்கும்  சிறப்புதவிகள் வழங்குவது

*     எம்ஆர்டி, எல்ஆர்டி எனப்படும் பொதுப் போக்குவரத்து ரயில் சேவைகளை விரிவுபடுத்துதல்

*     எல்லா ஊர்களிலும், மாநகர்களிலும் பேருந்து, ரயில், வாடகை வண்டி நிலையங்களை ஒருங்கிணைப்பது

*     தனிநபர்களுக்கான வாடகை வண்டி (டாக்சி) அனுமதிகளை  அதிகரிப்பது.

*     இரட்டைத் தண்டவாளப் பணிகளை நாடு முழுமைக்கும்  விரிவாக்குவது-நாடு முழுமையிலும் அதிவேக ரயில்  சேவைகளை உருவாக்குவது.

5.    உலகத் தரத்திலான உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் கிராமப்புற  உருமாற்றம்

*     வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையை மேலும் அதிகமான  ஓடு பாதைகளோடும் மேலும் அதிகமான வெளியேறும்   வாயில்களோடும் மேம்படுத்துவது

*     சபாவின் செருடுங் நகரையும் சரவாக்கின் செமாந்தான்  நகரையும் இணைக்கும் “பான் போர்னியோ” எனப்படும் 2,300 கிலோமீட்டர் தூரமுள்ள போர்னியோ நெடுஞ்சாலை  அமைத்தல்.

*     கோலகெராய்-கோத்தாபாரு பகுதியிலிருந்து கம்பாங்-செகாமாட்  வரையில் கிழக்குக் கரை நெடுஞ்சாலையை நீட்டிப்பது.

*     பந்திங்கிலிருந்து தைப்பிங் வரையிலான புதிய மேற்குக் கரை  நெடுஞ்சாலையை நிர்மாணித்தல்.

*     நகர்களுக்குள் இருக்கும் சாலைத் தடுப்புக் கட்டண  சாவடிகளை (டோல்) படிப்படியாகக் குறைத்தல்.

*     “21ஆம் நூற்றாண்டு கிராமம்” என்ற சித்தாந்த அடிப்படையில்  கிராமப்புற உருமாற்றத் திட்டத்தை அமுல்படுத்தி அதன்வழி கிராமப்புற மக்களையும் தேசிய மேம்பாட்டோடு இணைத்தல்

*     தீபகற்ப மலேசியாவில் மேலும் 6,300 கிலோமீட்டர் தூரமுள்ள  தார் சாலைகளை அமைத்தல், 2,500 கிலோமீட்டர் தூர   சாலைகளை  சபாவிலும், 2,800 கிலோமீட்டர் சாலைகளை   சரவாக்கிலும் அமைத்து அதன் மூலம் சுமார் 3.3 மில்லியன்   பேர்கள் பயனடையச் செய்தல்.

*     சிலாங்கூர், கூட்டரசுப் பிரதேசம், கிளந்தான் மாநிலங்களில்  குடிநீர் விநியோகத்தில் உள்ள பிரச்சனைகளுக்குத் தீர்வு  காணுதல்

*     மேலும் 320,00 இல்லங்களுக்கு குடிநீர் விநியோகம்  விரிவாக்கம்

*     மின்சார வசதிகளை தீபகற்ப மலேசியாவில் மேலும் 6,000  இல்லங்களுக்கும், சபாவில் 60,000 இல்லங்களுக்கும்,    சரவாக்கில் 80,000 இல்லங்களுக்கும் விரிவாக்குதல்

*     கைத் தொலைபேசி தொடர்புகளை விரிவுபடுத்துதல் –  கம்பி இல்லாத் தொடர்புகள் எல்லா இடங்களுக்கும் விரிவுபடுத்தப்படுவதை உறுதி செய்தல்.

6.    பெண்களின் பங்களிப்பை பலப்படுத்துதல்

*     தேசிய அளவில் முடிவெடுக்கும் பொறுப்பில் பெண்களின்  பங்களிப்பை உயர்த்துதல்

*     எல்லாத் துறைகளிலும் ஆண், பெண் பேதமின்றி எல்லா  மலேசியர்களும் பங்கேற்பதை உறுதி செய்தல்

*     மகளிருக்கு கூடுதலான வர்த்தக வாய்ப்புக்களையும், வருமானம் பெருக்கும் வாய்ப்புக்களையும் உருவாக்கி அவர்களுக்கு மேலும் சுதந்திரமான உணர்வுகளை உருவாக்கித் தருதல்

*     இல்லங்களிலிருந்து வேலை செய்வதற்கான  ஊக்குவிப்புக்களை வழங்குதல் – அதில் தனித்து வாழும் மகளிருக்கு முக்கியத்துவம் தருதல்.

*     ஒரே மலேசியா பகல் நேர காப்பகங்களை அரசு சார்பு   நிறுவனங்களிலும், அரசாங்க இலாகாக்களிலும் அமைத்தல் – அதே போன்று தனியார் நிறுவனங்களிலும் அமைக்க    ஊக்குவித்தல்.

*    பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் ரீதியான  வன்முறைகள், இல்லங்களிலும், பணியிடங்களிலும்  அவர்களுக்கு நேரும் துன்புறுத்தல்களுக்கு தீர்வு காண நடப்பு  சட்டங்களை வலுப்படுத்துதல்.

7.    துடிப்பான, தாக்குப் பிடிக்கக் கூடிய புத்தாக்க  பொருளாதாரத்தை     உருவாக்குதல்

*     13,000 பில்லியன் மதிப்புடைய முதலீடுகளை ஈர்த்தல் – 3.3 மில்லியன் வேலை வாய்ப்புக்களை உருவாக்குதல் –  அதில் 2  மில்லியன் வாய்ப்புக்கள் அதிக வருவாய் தரக்கூடிய   துறைகளாக இருப்பதை உறுதி செய்தல்.

*     தனிநபர் வருமானம் ஆண்டுக்கு 15,000 அமெரிக்க டாலராக  (45,000 ரிங்கிட்)   2020க்குள் உயர்வதற்கு பொருளாதாரத்தை மேம்படுத்துதல்

*     அதிகமான செல்வ வளத்தைப் பெருக்கும் வகையிலும்,  வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வித த்திலும்  புதுமையான, புத்தாக்கத் திட்டங்களுக்கு சிறப்பு ஊக்குவிப்பை  வழங்குதல்

*     எல்லா இனங்களுக்கும் பொதுவான, நியாயமான  கொள்கைகளை அமுல்படுத்துதல் – பொருளாதார உயர்வுக்கான திட்டங்கள் அறிமுகம் – அதில் தனியார்   நிறுவனங்கள் அதிகமாக பங்கு பெறுவதை உறுதி செய்தல் –   பங்கு முதலீட்டு சந்தையை மேம்படுத்துதல்.

*     பூமிபுத்ராக்களுக்கான உதவித் திட்டங்களை விரிவாக்குதல் –மேலும் சிறப்பான முறையில் செயல்படுத்துதல் – சபா, சரவாக்   மாநில பூமிபுத்ராக்களும் அதில் பயன்பெறுவது –   அவர்களுக்கான வர்த்தக வாய்ப்புகள், சாதகமான  சூழ்நிலைகள் (பயிற்சி மற்றும் கடனுதவித் திட்டங்கள்)  உருவாக்குவது, மற்றும்  அவர்களுக்கு அரசு அமைப்புக்களின்      ஆதரவை உறுதி செய்தல்

*    மாநில அரசுகளோடு இணைந்து பணியாற்றி உணவு உற்பத்தி,      கால்நடை வளர்ப்புக்காக அதிக நிலங்கள ஒதுக்கீடு  செய்யப்படுவதை உறுதிசெய்தல்

*     தற்போதைய வருமான வரி அமைப்பை மாற்றியைத்து அதன் மூலம் தனிநபர் வருமான வரி, நிறுவனங்களுக்கான  வருமான வரி ஆகியவற்றைக் குறைத்தல்.

*     சபா, சரவாக், திரெங்கானு, கிளந்தான், பகாங்  மாநிலங்களுக்கான எண்ணெய், எரிவாயு மான்யம் 20 சதவீதத்திற்கும் மேல் வழங்குதல்

*     சிறு வணிகர்கள், நடைபாதை வியாபாரிகள் ஆகியோர்  உள்ளிட்ட எல்லா மலேசியர்களுக்கும் சிறு கடனுதவித்   திட்டம் வழங்குவதற்காக 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு.

8.    கல்வி மேம்பாட்டிற்கான திட்டங்கள்   

*     எல்லா நிலைகளிலும் கல்வித் தரத்தை மேம்படுத்துதல்

*     எஸ்.பி.எம் தேர்வுகளில் ஆங்கிலம் கட்டாயத் தேர்ச்சி

*     சபா, சரவாக் பள்ளிகளை மேம்படுத்துதல்

*     தேசிய மாதிரி ஆரம்பப் பள்ளிகளுக்கு கூடுதல் ஒதுக்கீடு

*     ஒரே நேரப் பள்ளிகளை அதிகமாக உயர்த்துதல்

*     சிறப்பு உதவிகள் தேவைப்படும் குழந்தைகளுக்கு தனி வகுப்புகள் ஏற்படுத்துதல் – அதற்காக ஒவ்வொரு பள்ளிக்கும் 100,000 ஒதுக்கீடு,

*     பள்ளி ஆசிரியர் பயிற்சிகளின் தரம் உயர்த்துதல் – கூடுதல் ஒதுக்கீடு

*     எல்லா பொதுப் பல்கலைக் கழக வளாகங்களிலும் கம்பியில்லா அகண்ட அலைவரிசை கணினித் தொடர்புகள்

*     எல்லாப் பள்ளிகளிலும் மடிக் கணினிகளில், இணையத் தொடர்புகளோடு வாங்கும் வசதிகள்.

9.    பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாட்டின் பாதுகாப்பு

*     காவல் துறையினரின் எண்ணிக்கையை அதிகரித்தல்

*     மோட்டார் சைக்கிள் மூலம் கண்காணிப்புக்கு கூடுதலாக 5,000 மோட்டார் சைக்கிள்கள்

*     தெருவிளக்குகளை அதிகரித்தல் – அதன் வெளிச்சத்தை அதிகரித்தல்

*     இராணுவத்தை, காவல் துறையினரை பலப்படுத்துதல்

*     பொது இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் நிர்மாணிப்பு

*     வீடமைப்புப் பகுதிகளில் பாதுகாப்பையும், கண்காணிப்பையும் பலப்படுத்துதல்

10.   இளைய சமுதாயத்தை பலப்படுத்துதல்

*     இளைஞர்களுக்கான பயிற்சித் திட்டங்கள், வர்த்தகத் திட்டங்களுக்கு கூடுதல் நிதி மற்றும் ஊக்குவிப்புகள்.

*     இளைஞர் தலைமைத்துவ பயிற்சிகள் – புத்தாக்க சிந்தனை  பயிற்சிகள்

*     விளையாட்டாளர்களை ஊக்குவித்து உருவாக்குதல்

11.   பொதுமக்களுக்கான பாதுகாப்புத் திட்டங்கள்

*     குறைந்த வருமானமுடையவர்களுக்கு இன பாகுபாடின்றி நிதி  உதவிகள் – கல்வி வாய்ப்புகள்

*     பிரிக்பீல்ட்ஸ் பகுதியை கண்பார்வை குறைபாடுடையவர்களுக்கான நட்புப் பிரதேசமாக உருவாக்கி அதே போன்று மற்ற பிரதேசங்களை உடல் குறைபாடுடையவர்களுக்கு நட்பு பிரதேசமாக உருவாக்குவது

*     சிறப்பு நீதிமன்றங்களையும், கூடுதல் நீதிமன்றங்களையும்  உருவாக்குதல்

*     மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து பூர்வீக நிலங்களை அரசாங்கப் பதிவேட்டில் பதிவு செய்வது

*     பூர்வ குடியினருக்கு கல்வி மற்றும் வருவாய் பெருக்கும் வாய்ப்புகளை உருவாக்குதல்

*     அரசு சார்பற்ற அமைப்புக்களுக்கும் பொதுமக்கள் நலன்களுக்கு பாடுபடும் அமைப்புக்களுக்கும் நிதி உதவி

12.   இஸ்லாம் மற்றும் மற்ற மத சுதந்திரம்

*     இஸ்லாம் மதத்தை கூட்டரசின் மதமாக முன்னிறுத்துவது -பாதுகாப்பது

*     மற்ற மதங்களை மக்கள் பின்பற்ற அமைதியான, சுதந்திரமான சூழலை உருவாக்குவது.

*     முஸ்லீம் அல்லாதாருக்கான அமைச்சர் ஒருவரை பிரதமர் துறையில் நியமிப்பது

*     மத வழிபாட்டுத் தலங்களுக்கு நில ஒதுக்கீடு – வரி குறைப்பு –நிர்மாணிப்புக்கு, விரிவாக்கத்திற்கு நிதி ஒதுக்கீடு

13.   ஊழல் ஒழிப்பிற்கான நடவடிக்கைகள்

*     அரசாங்க குத்தகைகளில் வெளிப்படையான போக்கு

*     ஊழல் ஒழிப்பு ஆணையத்தை பலப்படுத்துவது – அதன் அதிகாரிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது.

*     கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையையும் அவர்களின் சிபாரிசுகளையும் செயல்படுத்துவது

*     நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் நேர்மை தன்மையை அமுல்படுத்துதல்

*     ஊழல் வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றங்கள் அமைத்தல்

14.   பொதுச் சேவைத் துறையை நல்ல நிர்வாகத் திறனை  மேம்படுத்துதல்

*     பொதுச்சேவைத் துறை ஊழியர்களின் தரத்தை மேம்படுத்துதல் அவர்களுக்கான ஊதியத்தையும் ஊக்குவிப்புகளையும்  வழங்குதல்.

15.  உலகளாவிய திட்டங்கள்

*     பாலஸ்தீன தனிநாடு உருவாக ஆதரவு

*     2015இல் ஆசியான் பொருளாதார மண்டல உருவாக்கத்திற்கு ஆதரவு

*     ஐக்கிய நாட்டு சபையில் நிரந்தரமில்லாத இடத்தைக் கோருவதன் மூலம் உலக விவகாரங்களில் பங்கெடுத்தல்

*     கருத்து வேறுபாட்டுக் களங்களான காஸா, மேற்கு பாலஸ்தீனபிரதேசம்,   தென் தாய்லாந்து, மிண்டானோ, போன்ற பகுதிகளில் மனிதநேய அணுகுமுறைகள்

16.   கோலாலம்பூர் மாநகரம்

*     வீடமைப்பு வசதிகள் மேம்படுத்துவது

*     குடிசைப் பகுதிகளின் மேம்பாடு

*     4 லட்சத்திற்கும் குறைவான வீடுகளுக்கு முத்திரை வரி  (ஸ்டாம்ப் பீஸ்) ரத்து

17.   இயற்கை வளங்களைப் பாதுகாத்தல்

*    தாவரங்களின் மூலம் எரிசக்தி மற்றும் சூரிய சக்தி திட்டங்களுக்கு தனியார் நிறுவனங்களுக்கும், வர்த்தக நிறுவனங்களுக்கும் நிதி உதவிகளும் ஊக்குவிப்பு    தொகைகளும் வழங்குதல்

*   பெரிய நகர்களில் பசுமைப் பகுதிகளுக்கான அதிகமான  நிலங்களை ஒதுக்குதல்

*     ஆறுகளையும், ஓடைகளையும் சீரமைத்தல்

*     சுற்றுச் சூழலுக்கு மதிப்பு கொடுக்கும் வண்ணம் கற்றுத் தரும் சூழலை உருவாக்குதல்

*     காட்டு வளங்களைப் பாதுகாத்தல், காடுகளின் மறு நடவுத் திட்டங்களை ஊக்குவித்தல்

*     சட்டத்துக்கு புறம்பான முறையில் வெட்டுமரங்களை எடுப்பதை ஒடுக்குவது

*     கழிவுகளை அகற்றும் திட்டங்களிலும் நிர்வாகத்திலும் பசுமைத் திட்டங்களைக் கொண்டு வருவது நவீனமயமான நடைமுறைகளைக் கொண்டு வருவது

–    பெர்னாமா