மாறாக, பகடிவதை ஏற்பட்டால் உடனடியாக தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் புகார் அளிக்குமாறு அவர் அறிவுறுத்தினார்.
“மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், புகார் அளிக்கும் முறைமை இருக்கும்போது, பள்ளிகள் பகடிவதைகள் வழக்குகளை மறைக்காது என்பதை நாம் உறுதி செய்ய வேண்டும். ஆனால், அவர்களின் நற்பெயரைப் பாதுகாக்க விரும்பும் பள்ளிகள் உள்ளன என்பதை என்னால் மறுக்க முடியாது.”
“இறுதியில், அவர்கள் பெரும்பாலான வழக்குகளைப் புகார் அளிக்காமல் விட்டுவிடுவார்கள். அது தொற்றுநோயாக மாறும்போது மட்டுமே ஒரு பிரச்சனையாக வெடிக்கிறது” என்று நேற்று புதன்கிழமை அவர் கூறினார்.
நேற்றைய நிகழ்ச்சியில், 13 முதல் 16 வயது வரையிலான சுமார் 40 பள்ளி மாணவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் உட்பட, பகடிவதை பிரச்சனைகளில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க கலந்து கொண்டனர்.
கல்வி அமைச்சகம் அனைத்து பரிந்துரைகளையும் மற்றும் வழிகாட்டுதல்களையும் மதிப்பாய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை செயல்படுத்தும் என்று அமைச்சர் தெரிவித்தார்.