கோலாலம்பூர்: பிகேஆர் மகளிர் பிரிவு மாநாட்டை அதன் துணைத் தலைவர் முகமட் அஸ்மின் அலி திறந்து வைப்பார் என்றும், அதே நேரத்தில் இளைஞர் பிரிவு காங்கிரஸை (ஏஎம்கே) முன்னாள் தலைவர் டாக்டர் வான் அசிசா வான் இஸ்மாயில் திறந்து வைப்பார் என்றும் கட்சியின் தகவல் தொடர்புத் தலைவர் பாஹ்மி பாட்சில் தெரிவித்தார்.
“இதுவரை, மகளிர் மாநாட்டை துணைத் தலைவர் திறந்து வைக்க உள்ளதாக செயலகம் கூறியுள்ளது. அதே நேரத்தில் ஏஎம்கே மாநாட்டை துணைப் பிரதமர் திறந்து வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது” என்று அவர் இன்று வெள்ளிக்கிழமை கூறினார்.
அஸ்மின் தனது வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் பாஹ்மி கூறினார்.
“அவரது வருகை குறித்த எந்த தகவலும் எனக்கு கிடைக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
பிகேஆர் கடந்த சில வாரங்களாக அதன் இளைஞர் அணியின் வருடாந்திரக் கூட்டத்தினை திறந்து வைக்கும் தலைவர்கள் மீதான கருத்து வேறுபாடுகளுக்குள் சிக்கியது. கட்சியின் துணைத் தலைவர் ஏஎம்கே மாநாட்டைத் தொடங்குவதற்கான பாரம்பரியத்தை பேண வேண்டும் என்று அஸ்மின் ஆதரவாளர்கள் வலியுறுத்தினர்.
ஏஎம்கே தலைவர் அக்மால் நாசீர் அஸ்மினின் அழைப்பை இரத்துசெய்து, வான் அசிசாவை அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்க அழைப்பு விடுத்திருந்தார்.
அசிசா தற்போது பிகேஆர் கட்சியின் ஆலோசனைக் குழுவின் தலைவராக உள்ளார். மகளிர் பிரிவு மாநாடு டிசம்பர் 5-ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, அதைத் தொடர்ந்து ஏஎம்கே தேசிய மாநாடு டிசம்பர் 7-ஆம் தேதி நடைபெறும்.