Home One Line P2 பிரிட்டன்: போரிஸ் ஜோன்சன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி!

பிரிட்டன்: போரிஸ் ஜோன்சன் தலைமையில் கன்சர்வேடிவ் கட்சி வெற்றி!

808
0
SHARE
Ad

பிரிட்டன்: பிரிட்டனின் முன்னணி கன்சர்வேடிவ் கட்சி நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பொதுத் தேர்தலில் 326 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்றுள்ளது என்று அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

ஆகக் கடைசி முடிவுகளின்படி, போரிஸ் ஜோன்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சி இப்போது நாடாளுமன்றத்தில்  பெரும்பான்மையைக் கொண்டுள்ளது.

கன்சர்வேடிவ் கட்சி 348 இடங்களை வென்றுள்ளது.

#TamilSchoolmychoice

உக்ஸ்பிரிட்ஜ் மற்றும் தெற்கு ரூயிஸ்லிப் தொகுதியில் தனது தொகுதியைத் தக்கவைத்தப் பின்னர், ஜான்சன் தமது வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

கன்சர்வேடிவ் அரசாங்கத்திற்கு பிரெக்சிட்டை நடத்தி முடிப்பதற்கு ஒரு சக்திவாய்ந்த புதிய ஆணையை இந்நாடு வழங்கப்பட்டுள்ளது. பிரெக்சிட்டைச் செய்து முடிப்பதோடு இல்லாமல், இந்த நாட்டை ஐக்கியப்படுத்தவும் அதை முன்னோக்கி எடுத்துச் செல்லவும் முற்பட வேண்டியுள்ளது” என்று அவர் கூறினார்.

தொழிலாளர் கட்சி பல தசாப்தங்களில் அடைந்திராத மிக மோசமான முடிவுகளைப் பெற்றுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அக்கட்சி இதுவரை 201 இடங்களை வென்றுள்ளது.

இஸ்லிங்டன் வடக்கு தொகுதியில் தனது பாரம்பரிய தொகுதியை வென்ற பின்னர் பேசிய ஜெர்மி கோர்பின், அவர் பதவி விலகுவதை  சுட்டிக்காட்டி பேசியுள்ளார்.

எதிர்கால பொதுத் தேர்தல் பிரச்சாரங்களில் நான் கட்சியை வழிநடத்த மாட்டேன் என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்,” என்று அவர் கூறினார்.