ரிக்டர் அளவில் 6.3 ஆக பதிவு செய்யப்பட்ட இந்த நில அதிர்வுகளால் இதுவரையில் உயிருடற் சேதங்களோ, பொருட் சேதங்களோ அறிவிக்கப்படவில்லை.
சுமார் பத்து வினாடிகள் நீடித்த இந்த நில அதிர்வுகள் ஆப்கானிஸ்தானின் காபூல் நகரிலிருந்து சுமார் 245 கிலோமீட்டர் தொலைவில், தரையிலிருந்து 190 கிலோ மீட்டர் ஆழத்தில் உருவாகியதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வட இந்தியாவின் மதுரா, லக்னோ, பிரயாக்ராஜ், ஜம்மு, காஷ்மீர் பகுதிகளிலும் இந்த நில அதிர்வுகள் உணரப்பட்டதாகவும், பாகிஸ்தானின் லாகூர் வட்டாரத்திலும் மக்கள் பீதியுடன் வெளியேறியதாகவும் செய்திகள் வரத் தொடங்கியிருக்கின்றன.