சென்னை: பொங்கலை முன்னிட்டு ஆண்டுதோறும் கோலாகலமாக நடத்தப்படும் உலகப்புகழ் பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று வெள்ளிக்கிழமை உற்சாகத்துடன் தொடங்கியது.
கடந்த 2017-இல் இப்போட்டிக்கு தடை விதிக்கப்பட்டு பின்னர், இதற்கான போராட்டம் தமிழ் நாடெங்கிலும் வெடித்து மீண்டும் இப்போட்டியை நடத்தும் அனுமதியை தமிழகம் பெற்றது.
அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டியைக் காண சுற்று வட்டாரத்திலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஆயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர்.
இப்போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. விதிகளை மீறும் வீரர்கள் வெளியேற்றப்படுவார்கள்.
மொத்தமாக 700 காளைகள் இப்போட்டியில் பங்கெடுக்க உள்ளன. அவற்றை அடக்க 900 வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். இம்முறை, மாடுகளை அடக்கும் வீரர்களுக்கு சிறப்பு பரிசாக 2 கார்கள் வழங்கப்படவுள்ளன.