Home One Line P1 18 விழுக்காடு நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!

18 விழுக்காடு நெடுஞ்சாலை கட்டணக் குறைப்பு பிப்ரவரி 1 முதல் அமலுக்கு வருகிறது!

718
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் வடக்கு தெற்கு நெடுஞ்சாலை திட்டத்தின் (பிளாஸ்) அனைத்து நெடுஞ்சாலைகளிலும் தனியார் வாகனங்களுக்கான கட்டண விகிதத்தில் 18 விழுக்காடு குறைப்பு அமல்படுத்த அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

இன்று வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் இது குறித்து வெளியிட்ட பிரதமர் அலுவலகம், ஜனவரி 15-ஆம் தேதியன்று அமைச்சரவைக் கூட்டத்தின் ஒப்புதலுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலைகளான, கிள்ளாங் பள்ளத்தாக்கு நெடுஞ்சாலை (என்கேவிஇ), வடக்குதென் மத்திய அதிவேக நெடுஞ்சாலை (எலைட்), மலேசியா- சிங்கப்பூர் இரண்டாவது  நெடுஞ்சாலை (லிங்கெடுவா), கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலை 2 (எல்பிடி 2), சிரம்பான்- போர்ட் டிக்சன் அதிவேக நெடுஞ்சாலை (எஸ்பிடிஎச்), பட்டர்வோர்த்கூலிம் (பிகேஇ) நெடுஞ்சாலை மற்றும் பினாங்கு பாலம் ஆகியவற்றில் இந்த கட்டணக் கழிப்பு அமலுக்கு வரும்.

#TamilSchoolmychoice

எடுத்துக்காட்டாக, வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் கட்டணம் ஒரு கிலோமீட்டருக்கு 13.6 சென்னிலிருந்து, 11.15 சென் வரையிலும் குறையும். செயல்படுத்தப்படும்போது, ​​இப்புதிய கட்டண விகிதம் 1999-இல் இருந்த ஒரு கிலோமீட்டருக்கு 11.24 சென் என்ற கட்டண விகிதத்தை விட குறைவாக இருக்கும்.”

ஜாலான் டூதாவிலிருந்து அலோர் ஸ்டார் செல்லும் கட்டண விகிதம் 45.50 ரிங்கிட்டுக்கு குறைக்கப்படும். தற்போது அதன் கட்டண விகிதம் 55.50 ரிங்கிட்டாக இருக்கிறது. அதுவே, ஜாலான் டூதாவிலிருந்து ஸ்கூடாய் செல்லும் கட்டணம் 38.50 ரிங்கிட்டுக்கு குறைக்கப்படும்.என்று அது கூறியுள்ளது.

இந்த முடிவுக்கு ஏற்ப, அனைத்து பிளாஸ் அதிவேக நெடுஞ்சாலைகளுக்கான சலுகை காலத்தை 2038 முதல் 2058 வரை 20 ஆண்டுகளுக்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக் கொண்டதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அரசாங்கத்தையே நம்பி இருக்காமல், பிளால் நிறுவனம் நெடுஞ்சாலை பராமரிப்பு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும் என்பதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டது என்று அது குறிப்பிட்டுள்ளது.

கட்டண விகிதங்களைக் குறைப்பதால் இது மக்களுக்கு பயனளிக்கும் என்று அரசாங்கம் நம்புகிறது, அதே நேரத்தில் பிளாஸ் ஒரு நல்ல நிதி நிலையில் தொடர்ந்து செயல்பட உதவுகிறது.” என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.