சென்னை – சில மாதங்களுக்கு முன்னர் ரம்யா பாண்டியன் என்ற பெயரைச் சொன்னாலே யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. “யார் அவர்?” என்று பலரும் கேட்டிருப்பார்கள்.
“ஜோக்கர்” படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தாலும், அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை காரணமாக அவ்வளவாகக் கவனிக்கப்படாமல் இருந்தார் ரம்யா பாண்டியன்.
ஆனால் இன்று நிலைமை அப்படியல்ல! அண்மையில் தனது அழகான சேலைக் கட்டுகளோடு கூடிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பதிவுகளிலும், இணையத் தளங்களிலும் ரம்யா பாண்டியன் பகிர்ந்து கொள்ள, அதில் கிறங்கிப் போன இரசிகர்கள் அதை இலட்சக்கணக்கில் இணையவாசிகளுடன் பகிர்ந்து கொண்டதில் ஓரிரு நாளில் பிரபலமாகி விட்டார் ரம்யா.
இப்போதும் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் தனது வித்தியாசமான சேலைக்கட்டுகளுடன் கூடிய படங்களை பதிவிட்டு வருகிறார் ரம்யா.
தமிழ்நாட்டுக்கே உரிய தோற்றம், எளிமையான அழகு என உலா வந்து இணைய வெளிகளில் புகழ் பெற்றிருந்தாலும், திரைப்படங்களில் இன்னும் போதிய வரவேற்பு ஏனோ ரம்யா பாண்டியனுக்குக் கிடைக்கவில்லை.
நவீன ஆடைகளுடன் அவர் தனது புகைப்படங்களைப் பதிவிட்டாலும், அவரது சேலைக்கட்டு புகைப்படங்களுக்குத்தான் இரசிகர்களிடையே வரவேற்பு. ஏன் என்பதை விளக்கவும் தேவையில்லை.
ரம்யா பாண்டியனின் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் புகைப்படங்கள் சிலவற்றை இங்கே காணலாம்: