கோலாலம்பூர்: புதிய ஊழல் குறியீட்டில் (சிபிஐ) மலேசியா 100 புள்ளிகளில் 53 புள்ளிகளைப் பெற்றுள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு மலேசியா 61 புள்ளிகளைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இன்று வியாழக்கிழமை கோலாலம்பூரில், மலேசிய அனைத்துலக வெளிப்படைத்தன்மை (டிஐ–எம்), தலைவர் டாக்டர் முகமட் மோகன் இதனை வெளியிட்டார்.
1எம்டிபி, எஸ்ஆர்சி இன்டர்நேஷனல், பெல்டா மற்றும் தாபோங் ஹாஜி ஆகியவற்றில் ஏற்பட்ட ஊழல்களை, நம்பிக்கைக் கூட்டணி நிர்வாகத்தை ஏற்ற பிறகு உடனடியாக எடுத்த நடவடிக்கையால்தான் உலகளாவிய தரவரிசையில் இந்த மாற்றத்திற்கு காரணம் என்று அவர் கூறினார்.
சுழியம் என்பது ஆக மோசமான ஊழலைக் கொண்டது என்றும், 100 புள்ளிகள் என்பது மிக சுத்தமான நாடு எனவும் பொருள்படுகிறது.