Home One Line P1 “மரியாதைக்குரிய பெருமாட்டி!” – தோ புவானுக்கு டான்ஸ்ரீ குமரன் புகழாரம்

“மரியாதைக்குரிய பெருமாட்டி!” – தோ புவானுக்கு டான்ஸ்ரீ குமரன் புகழாரம்

774
0
SHARE
Ad

கோலாலம்பூர் – தோபுவான் உமா சம்பந்தன் அவர்களின் மறைவை அறிந்து மிகவும் வருந்துவதாக முன்னாள் துணையமைச்சரும், மஇகா பேராக் மாநிலத்தின் முன்னாள் தலைவருமான டான்ஸ்ரீ க.குமரன் தனது இரங்கலைத் தெரிவித்தார்.

“1962ஆம் ஆண்டு சுங்கை சிப்புட் மகாத்மா காந்தி கலாசாலையில் ஆசிரியராக பணிபுரிந்த காலத்திலிருந்தே அவரை நான் நன்கு அறிவேன். தனது வாழ்நாள் முழுதும் அரசியலில் தீவிரமாக இல்லாவிட்டாலும் கூட்டுறவுக் கழகம், சமூக, சமய இயக்கங்களில் தன்னை இணைத்துக்கொண்டு அரும்பணிகளாற்றிய நல்ல பெருமாட்டி. ஓர் அமைச்சரின் மனைவியாயிருந்தும் எந்த ஒரு பந்தாவும் இல்லாமல் பண்பாட்டின் சிகரமாக வாழ்ந்தவர். துன் அவர்களின் அரசியல் பணிக்கு இலைமறை காயாக அவர் பணியாற்றியிருந்தாலும் தோட்டத் துண்டாடலைத் தடுத்து நிறுத்துவதற்கு தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கம் தோற்றுவிக்கப்பட்டபோது, நாடு முழுதும் சென்று பணம் திரட்டுவதற்கு துணை நின்றதுடன் துன் அவர்களின் மறைவிற்குப் பிறகு அந்த கூட்டுறவுக் கழகத்தின் தலைமைப் பொறுப்பையும் ஏற்று பணியாற்றியுள்ளார்.முதுமையிலும் சிரமத்தை எதிர்நோக்காது தனக்கு வரும் அழைப்புகளை எல்லாம் ஏற்று கலந்து கொண்டவர்” என தனது இரங்கல் செய்தியில் குமரன் குறிப்பிட்டார்.

“இந்த நாட்டு வரலாற்றில் இந்திய சமுதாயத்தினரிடையே மதிக்கப்பட்ட ஒரு பெரும்  மரியாதைக்குரிய பெண்மணியான தோபுவான் அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்” என்றும் குமரன் தனது இரங்கல் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளார்.