கோலாலம்பூர்: இன்று செவ்வாய்க்கிழமை மாமன்னர் சுல்தான் அப்துல்லா நடத்திய நேர்காணலில் தாங்கள் யாரை பிரதமராக தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள் என்று தெரிவிக்க வேண்டி இருந்ததாக கோலா க்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் முகமட் சைட் கூறினார்.
எவ்வாறாயினும், சத்தியப்பிரமாணம் இரகசியமானது என்றும், அதை வெளியிட முடியாது எனவும் அவர் கூறினார்.
அதற்கு பதிலாக யார் பிரதமராக இருக்க வேண்டும், அல்லது நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டுமா என்பது மாமன்னரின் முடிவு என்று அவர் கூறினார்.
“இரண்டு தேர்வுகள் உண்டு, பிரதமரின் பெயரைக் கூறலாம், அல்லது நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம்,” என்று அவர் கூறினார்.