Home One Line P1 பச்சை மண்டலங்களில் இணைய நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி!

பச்சை மண்டலங்களில் இணைய நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகளுக்கு அனுமதி!

627
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இணைய நிறுவல் மற்றும் பராமரிப்பு சேவைகள் இப்போது பச்சை மண்டலங்களில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன. அங்கு கொவிட்-19 நேர்மறை சம்பவங்கள் எதுவும் இல்லாததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சேவையில் பழுது பார்த்தல், வலை அமைப்பு பராமரிப்பு மற்றும் புதிய உள்கட்டமைப்பு நிறுவல் ஆகியவை அடங்கும் என்று மலேசிய தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சு நேற்று ஓர் அறிக்கையின் வாயிலாகத் தெரிவித்தது.

“இருப்பினும், கொவிட்-19 நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளான மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களின் கீழ் இந்த வளாகங்கள் அமைந்திருந்தால், அகலக்கற்றை நிறுவல் அனுமதிக்கப்படாது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பழுதுபார்ப்புக்காக, தொலைத் தொடர்பு நிறுவனங்கள் மற்றும் நிறுவிகள் ஆகியவை பசுமை மண்டலத்திற்குள் இருந்தால் வாடிக்கையாளர் வளாகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களில், அவை விநியோக இடத்தில் இருந்து மட்டுமே சிக்கல்களை தீர்க்க முடியும்.”

“தேவையான மற்றும் முக்கியமான சேவைகளுக்காக மட்டுமே மஞ்சள் மற்றும் சிவப்பு மண்டலங்களில் உள்ள வளாகத்திற்குள் நுழைவதற்காக அனுமதிக்கப்படுகிறது,” என்று அது கூறியது.