Home One Line P1 சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்!

சிங்கப்பூரிலிருந்து 400 மலேசியர்கள் மட்டுமே தினமும் நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர்!

585
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சிங்கப்பூரிலிருந்து தினமும் 400 மலேசியர்கள் மட்டுமே நாட்டிற்குள் நுழைவது ஏற்றுக்கொள்ளப்படும் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் அறிவித்தார்.

நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தியதிலிருந்து அக்குடியரசில் சிக்கித் தவிப்பவர்களை சுமுகமாக நகர்த்துவதற்கு ஜோகூர் பாதுகாப்பு மன்றம் மற்றும் மலேசிய குடி நுழைவுத் துறை எடுத்த முடிவு இது என்று அவர் கூறினார்.

சிங்கப்பூரில் உள்ள மலேசிய தூதரகத்திலிருந்து நுழைவு அனுமதிப்பத்திரத்தைப் பெறவும், திரும்பும் தேதிக்கு குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக stmsg@mhc.org.sg என்ற மின்னஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“விண்ணப்பம் இப்போது திறக்கப்பட்டுள்ளது, தூதரகம் இதுவரை 900 விண்ணப்பங்களைப் பெற்றுள்ளது,” என்று அவர் கூறினார்.

அவர்கள் திரும்பி வந்தபின்னர் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்றும் இஸ்மாயில் சப்ரி கூறினார்.