Home One Line P1 நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து மீண்டும் இணைவது தன்மானமற்றது!

நம்பிக்கைக் கூட்டணியில் பெர்சாத்து மீண்டும் இணைவது தன்மானமற்றது!

823
0
SHARE
Ad

ஜோகூர்: பெர்சாத்து கட்சியை மீண்டும் நம்பிக்கைக் கூட்டணி இணைத்துக் கொள்வது குறித்து ஜோகூர் பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் சாடியுள்ளார். அமானா கட்சி துணைத் தலைவர் சலாவுடின் அயோப் இந்த கருத்தினை நேற்று முன்வைத்துள்ளார்.

சலாவுடினின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துக்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கைக் கூட்டணிக் கட்சியாக பெர்சாத்து மீண்டும் சேர வேண்டும் என்ற கருத்தை இளைஞர் பிரிவு கடுமையாக நிராகரிப்பதாக அகமட் சுக்ரி கூறினார்.

#TamilSchoolmychoice

“பெர்சாத்துவை நம்பிக்கைக் கூட்டணிக்குள் கொண்டுவருவதற்கான எந்தவொரு யோசனையும் நியாயமற்றது என்று பிகேஆர் இளைஞர் அணி கருதுகிறது. மேலும் இந்த யோசனையை நம்பிக்கைக் கூட்டணி தலைமை நிராகரிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.

அரசாங்க நிறுவனங்களில் அரசியல் நியமனங்கள் குறித்து அதிருப்தியைத் தொடர்ந்து ஜோகூரில் அம்னோவிற்கும் பெர்சாத்துக்கும் இடையிலான பதட்டங்களுக்கு மத்தியில் சலாவுடின் நேற்று இந்த அறிக்கையை வெளியிட்டார்.

“மத்திய அல்லது மாநில அளவில் பெர்சாத்து நம்பிக்கைக் கூட்டணியுடன் திரும்ப வேண்டும் என்ற எண்ணம் இருந்தால், நம்பிக்கைக் கூட்டணி விட்டுவிட்டு பெர்சாத்து , அம்னோ, பாஸ் அல்லது அஸ்மின் அலி குழுக்களுடன் செல்லட்டும் ” என்று அவர் கூறினார்.