Home கலை உலகம் கௌதம் கார்த்திக்குடன் இணையும் லஷ்மி மேனன்

கௌதம் கார்த்திக்குடன் இணையும் லஷ்மி மேனன்

976
0
SHARE
Ad

lakshmi சென்னை, ஏப்ரல் 11- நடிகை லக்ஷ்மி மேனன் சிலம்பாட்டம் இயக்குனர் சரவணன் இயக்கும் படத்தில் கௌதம் கார்த்திக் ஜோடியாக நடிக்கிறார்.

கௌதம் கார்த்திக் மணிரத்னத்தின் கடல் படத்திற்கு பின்பு ஐஷ்வர்யா ரஜினிகாந்தின் படத்தில் நடிக்கிறார் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் சிலம்பாட்டம் புகழ் இயக்குனர் சரவணன் படத்தில் நடிக்க கௌதம் கார்த்திக் ஒப்பந்தமாகியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லக்ஷ்மி மேனன் நடிக்கிறார். கடல் படத்தில் மீனவராக நடித்த கௌதம் இதில் கல்லூரி மாணவராக நடிக்கிறார். அவரின் காதலி தான் லக்ஷ்மி. புகைப்படப்பிடிப்பு முடிந்து விட்ட நிலையில் வரும் மே மாத இறுதியில் படப்பிடிப்பை துவங்கவிருக்கிறது.

ஏற்கெனவே கௌதம் நடித்த கடல் படம் சரியாக ஓடாததால், தற்போது நடிக்கும் இந்தப் படம் கைகொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.