Home One Line P1 சபாவில் 2 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று

சபாவில் 2 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று

436
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபாவில் கொவிட்19- இன் இரண்டு புதிய சம்பவங்கள் சபா பல்கலைக்கழக (யூஎம்எஸ்) மாணவர்கள் சம்பந்தப்பட்டவை என்று மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் கிறிஸ்டினா ருண்டி தெரிவித்தார்.

இந்த சம்பவம் நேற்று கண்டறியப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

” யுஎம்எஸ் சபா மாநில மாணவர் இயக்கம் நடத்திய இந்த பரிசோதனை மற்றும் மாதிரிகள் மூலம் இந்த சம்பவம் கண்டறியப்பட்டது,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

இரு மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

“யுஎம்எஸ்ஸில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன, மேலும் நோய்த்தொற்றுக்கான காரணம் இன்னும் விசாரணையில் உள்ளது,” என்று அவர் கூறினார்.

இதுவரை பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களுக்கு கொவிட்19 தொற்று ஏற்பட்டுள்ளதாக டாக்டர் கிறிஸ்டினா கூறினார்.

மே 11 அன்று, சபா 10 கொவிட்-19 நேர்மறை சம்பவங்களை பதிவுசெய்தது. அவர்களில் இரண்டு பேர் தீபகற்பத்திலிருந்து வந்த பல்கலைக்கழக மாணவர்கள்.