Home One Line P1 நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது

நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டது

558
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை (மே 18) புதிதாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ள தேசிய கூட்டணி அரசாங்கத்தின் கீழ் மக்களவையின் வரலாற்று திறப்பு விழாவில் கலந்து கொள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரத் தொடங்கியதால் நாடாளுமன்ற வளாகத்திற்குச் செல்லும் சாலைகளில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய கொவிட் -19 தடுப்பு நடவடிக்கைகளின்படி, சாலையில் இருந்து விலகி இருக்கவும், ஒருவருக்கொருவர் தூரத்தை கடைப்பிடிக்கவும் ஊடகவியலாளர்களை காவல் துறையினர் நினைவூட்டினர்.

மாமன்னர் சுல்தான் அப்துல்லா நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தைத் திறந்து வைத்து அரச உரை நிகழ்த்தவுள்ளார்.

#TamilSchoolmychoice

நாடாளுமன்றத்தின் இரண்டாவது கூட்டம் ஜூலை 13 ஆம் தேதி தொடங்கும்.